For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாசனையான நேரம்: காலையில் காபி, மாலையில் விஸ்கி வாசனை வரும் வாட்ச்

By Siva
Google Oneindia Tamil News

நியூயார்க்: நேரத்தை வாசனை மூலம் நமக்கு தெரிவிக்கும் புதிய கை கடிகாரத்தை அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள தி நியூ ஸ்கூலில் பேராசிரியராக இருப்பவர் ஐசன் காரோ சாசின். அவர் வித்தியாசமான கை கடிகாரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

அந்த கடிகாரத்தில் அப்படி என்ன வித்தியாசம் என்று நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்

வாசனை வாட்ச்

வாசனை வாட்ச்

இந்த கை கடிகாரம் நேரத்திற்கேற்ப ஒரு வாசனையை வெளிப்படுத்தும். கடிகாரத்தில் இருந்து வரும் வாசனையை வைத்தே நீங்கள் நேரத்தை தெரிந்து கொள்ள முடியும்.

காபி

காபி

உதாரணமாக, காலை நேரம் என்றால் கடிகாரத்தில் இருந்து காபி வாசனை வரும். மதிய வேளை என்றால் பண வாசனையும், மாலையில் விஸ்கியும், இரவில் இனிமையான கெமோமைல் பூ வாசனையும் வரும்.

வாசனை திரவியங்கள்

வாசனை திரவியங்கள்

இந்த கடிகாரத்தில் நான்கு கண்ணாடி பல்புகள் உள்ளன. ஒவ்வொரு பல்பிலும் சுமார் ஒரு மில்லிலிட்டர் அளவுக்கு 4 வகையான வாசனை திரவியங்கள் இருக்கும்.

வாசனைகள்

வாசனைகள்

காலை 6 மணிமுதல் மதியம் வரை கடிகாரத்தில் இருந்து காபி வாசனை வரும். நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை பண வாசனை(பேப்பர் வாசனை) வரும். மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை விஸ்கி மற்றும் புகையிலை வாசனை வரும். இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை கெமோமைல் பூ வாசனை வரும்.

English summary
A new chemical-based watch lets you know what time of the day it is by emitting specially-designed fragrances. A fully functional prototype of the Scent Rhythm watch has been developed by Aisen Caro Chacin, a Physical Computing Lecturer at The New School, New York.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X