திடீரென வானத்தில் தோன்றிய "நெருப்பு பந்து!" பொதுமக்களுக்கு செம ஷாக்.. கடைசியில் பார்த்தா இது தானாம்
வெலிங்டன்: நியூசிலாந்து வானத்தில் திடீரென தோன்றி மர்மப் பொருளால் பொதுமக்கள் குழம்பிப்போய்விட்டனர்.
Recommended Video
நமது இந்த பிரபஞ்சம் பல ஆச்சரியங்களைக் கொண்டது. இந்த பிரபஞ்சம் பற்றி நமக்கு மிக மிகக் குறைந்த அளவே தெரியும்.
பிரபஞ்சம் பற்றித் தெரிந்து கொள்ள உலகெங்கும் பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகிறது. குறிப்பாக வேற்று கிரக வாசிகளைத் தொடர்பு கொள்ளவும் முயற்சிகள் நடந்து வருகிறது.

நியூசிலாந்து
நியூசிலாந்தின் வெலிங்டனில் உள்ள நார்த் தீவில் வசிக்கும் மக்கள் வியாழக்கிழமை தங்களுக்கு மேலே வானத்தில் திடீரென எதோ ஒரு பெரிய மர்ம நெருப்பு பந்தைப் பார்த்து உள்ளனர். ஓரளவு பெரிய அளவில் இருந்த இந்த நெருப்பு பந்து மின்னல் வேகத்தில் பூமியை நோக்கி வந்துள்ளது. மேலும், இது இடி மின்னலை போலப் பலத்த சத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.

என்ன நடந்தது
முதலில் இது என்னவென்றே அங்குள்ள மக்களுக்குப் புரியவில்லை. பின்னர் தான், இது பூமியில் விண்கல் மோதும் அரிய நிகழ்வு என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். சுமார் 1 மீட்டர் அகலத்தில் இருந்த இந்த விண்கல் மதியம் 1.52 மணியளவில் காணப்பட்டது. இதற்கு முன்பு நியூசிலாந்து நாட்டில் இதுபோன்ற விண்கல் விழும் நிகழ்வு 23 ஆண்டுகளுக்கு முன்னர், கடந்த 1999 ஜூலை 7ஆம் தேதி அன்று தான் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்டிராய்டுகள்
இது தொடர்பான ஃபோட்டோக்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இது ஏன் நடக்கிறது என்பதைப் பார்க்கலாம். விண்வெளியில் இருக்கும் ஆஸ்டிராய்டுகளை ஆய்வாளர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். ஆஸ்டிராய்டுகள் எனப்படும் சிறுகோள்கள் நமது விண்வெளியில் தொடர்ந்து சுற்றிக் கொண்டே இருக்கும். பெரும்பாலும் இதுபோன்ற ஆஸ்டிராய்டுகளால் பூமிக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படாது. அதேநேரம் பூமியின் அருகே வந்தால் இது பூமியின் புவி ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்படும் அபாயம் உள்ளது.

சாம்பல் ஆகும்
அப்போது சில சமயங்களில் மட்டும் விண்கற்கள் பூமியின் சுற்றுவட்டார பாதையில் நுழையும். இருப்பினும், அவை பூமியை அடையும் முன்னரே அதிக வெப்பத்தில் எரிந்து சாம்பல் ஆகிவிடும். அதையும் தாண்டி சில சமயங்களில் மட்டும் சிறிய அளவிலான விண்கற்கள் பூமியில் மோதும் அபாயம் உள்ளது. அப்படியொரு அரிய நிகழ்வு தான் இப்போது நியூசிலாந்து நாட்டில் நடந்துள்ளது.

விண்கற்கள்
விண்கற்கள் என்பது விண்வெளியில் உள்ள பொருட்களாகும். அவை தூசி முதல் சிறிய சிறுகோள்கள் வரையிலான சைஸ்களில் இருக்கும். இதனை "விண்வெளிப் பாறைகள்" என்று கூறலாம். விண்கற்கள் பூமி உள்ளிட்ட எந்தவொரு வளிமண்டலத்தில் நுழையும் வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், அதிவேகமாக வருவதால், ஃபயர்பால்ஸ் அடையும் போதே அவை எரிந்து சாம்பல் ஆகிவிடும்.












Click it and Unblock the Notifications