இந்தியாவிலிருந்து யாரும் இந்த பக்கம் வராதீங்க.. நியூசிலாந்து பிரதமர் அதிரடி அறிவிப்பு.. காரணம் என்ன?
வெலிங்டன்: கொரோனா பாதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் இருந்து வரும் பயணிக்குத் தற்காலிக தடை விதித்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் உத்தரவிட்டுள்ளது.
உலகெங்கும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய, மத்திய கிழக்கு என அனைத்து நாடுகளிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதிலும் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1.26 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு மிக மோசமாக அதிகரித்துள்ளது.

இந்தியாவுக்கு தடை
இந்நிலையில், இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்குத் தற்காலிகமாகத் தடை விதிப்பதாக நியூசிலாந்து அரசு அறிவித்துள்ளது. ஆக்லாந்தில் செய்தியாளர்களிடம் பேசிய நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், இந்தியாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் தற்காலிகமாகத் தடை விதிக்கிறோம். இந்தியாவில் இருக்கும் நியூசிலாந்து குடிமக்களுக்கும் இது பொருந்தும். அவர்களுக்கும் நியூசிலாந்து திரும்பத் தடை விதிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

கொரோனா பாதிப்பு அதிகம்
இந்தத் தடை உத்தரவு வரும் ஏப்ரல் 11ஆம் தேதி மாலை 4 மணி முதல் அமலுக்கு வருகிறது. நியூசிலாந்து நேற்று மட்டும் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்களில் 17 பேர் இந்தியாவில் இருந்து திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே தற்போது இந்தியாவில் இருந்து வருபவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அதன் பின்னர் இருக்கும் சூழ்நிலையைப் பொறுத்து முடிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிற்கு எதிரானது இல்லை
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் மேலும் கூறுகையில், இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகமாக உறுதி செய்யப்படுகிறது. பொதுவாக, கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள காரணங்களைக் கண்டறிந்து, அதைக் குறைக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இது எந்த ஒரு நாட்டையும் மட்டும் குறிவைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை இல்லை என்று அவர் தெரிவித்தார்.

நடவடிக்கைகள்
நியூசிலாந்து நாட்டில் உள்நாட்டு கொரோனா பரவல் என்பது முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 40 நாட்களில் நியூசிலாந்தில் உள்நாட்டு கொரோனா பரவல் முற்றிலுமாக தடுத்த நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலை மிக விரைவாகக் கட்டுப்படுத்திய நாடாக நியூசிலாந்து உள்ளது. அந்நாட்டுப் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் எடுத்த நடவடிக்கை காரணமாக நியூசிலாந்தில் மிக விரைவாகவே இயல்பு நிலை திரும்பியது.

நியூசிலாந்தில் கொரோனா பாதிப்பு
நியூசிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் எழு பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்தியாவில் நேற்று மட்டும் சுமார் 1.26 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 1.29 கோடியை தாண்டியுள்ளது. இதுவரை பதிவான ஒட்டுமொத்த கொரோனா உயிரிழப்பும் 1.66 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications