கடத்தப்பட்ட 200 பள்ளி மாணவிகளின் இருப்பிடம் எனக்குத் தெரியும்.... போர்னோ கவர்னர் அறிவிப்பு
லண்டன்: தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட மாணவிகள் தற்போது இருக்கும் இடம் தனக்குத் தெரியும் என போர்னோ மாநில கவர்னர் அறிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு நைஜீரியாவில் சுமார் 200க்கும் அதிகமான பள்ளி மாணவிகள் போகோ ஹரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். பெண்களுக்கு கல்வி வழங்கக் கூடாது என்பதற்காக அம்மாணவிகள் கடத்தப்பட்டதாகவும், கடத்தப்பட்ட அம்மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த இருப்பதாகவும் தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாயின.

இதற்கிடையே, கடத்தப்பட்ட மாணவிகளில் சிலர் தீவிரவாதிகளிடமிருந்து சாமர்த்தியமாக தப்பி வந்தனர். ஆனபோதும், இன்னமும் 200 மாணவிகள் தீவிரவாதிகளின் பிடியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அம்மாணவிகளையும் பாதுகாப்பாக மீட்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், கடத்தப்பட்டுள்ள மாணவிகளின் இருப்பிடம் தனக்குத் தெரியும் என அந்நாட்டின் போர்னோ மாநில கவர்னரான காஷிம் ஷெட்டிமா தெரிவித்துள்ளதாக பி.பி.சி. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், அவர் கடத்தப்பட்டுள்ள மாணவிகளை பார்த்தாகவும், தான் பார்த்தது அம்மாணவிகளை தானா என உறுதி செய்யுமாறு நைஜீரிய ராணுவத்தை அவர் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தீவிரவாதிகள் அம்மாணவிகளை கேமருன் அல்லது சாட் எல்லையை தாண்டி கடத்திச்சென்றுவிடவில்லை என ஷெட்டிமா உறுதி படத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இந்த விவகாரத்தில் தீர்வு காண்பது குறித்து விவாதிக்க வருமாறு நைஜீரிய மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு பிரெஞ்சு அதிபர் பிராங்கோய்ஸ் ஹொல்லாண்டே அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications