Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இம்ரான் கான் ராஜினாமாவிற்கு வாய்ப்பே இல்லை! ஆட்டம் இனிதான் ஆரம்பம்.. பாகிஸ்தான் அமைச்சர் அதிரடி

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: ‛‛பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடைசி பந்து வரை போராடக்கூடிய வீரர். இவர் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை. நண்பர்களும், எதிரிகளும் பார்க்கும் வகையில் ஒரு ஆட்டம் உள்ளது'' என்று அவரது அமைச்சர் பவாத் சவுத்ரி கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் மொத்தம் 342 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சியமைக்க 172 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

கடந்த மக்களவை தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரி இ-இன்ஷெப் கட்சி 155 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

கூட்டணி அமைத்த இம்ரான் கான்

கூட்டணி அமைத்த இம்ரான் கான்

இருப்பினும் ஆட்சியமைக்க தேவையான 172 இடங்கள் கிடைக்கவில்லை. இதனால் பிற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் முட்டாஹிதா குவாமி இயக்கம் (எம்கியூஎம்) உள்ளிட்ட சில கட்சிகள் இம்ரான்கானுக்கு ஆதரவளித்தன. இதையடுத்து 179 உறுப்பினர்களின் ஆதரவுடன் இம்ரான் கான் பிரதமரானார்.

எதிர்க்கட்சிகள் பலம் அதிகரிப்பு

எதிர்க்கட்சிகள் பலம் அதிகரிப்பு

இந்நிலையில் தான் இம்ரான்கான் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை பாகிஸ்தான் முட்டாஹிதா குவாமி இயக்கம் (எம்கியூஎம்) கட்சி விலக்கிக்கொண்டு எதிர்க்கட்சி பக்கம் சாய்ந்தது. இதனால் இம்ரான் கானின் பலம் 164 ஆக குறைந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் பலம் 177 ஆக அதிகரித்தது. இதன் மூலம் இம்ரான்கானின் அரசு கவிழ்வது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானம்

நம்பிக்கையில்லா தீர்மானம்

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாளை விவாதம் நடைபெற்ற உள்ளது. இதனை தொடர்ந்து ஏப்ரல் 3ம் தேதி தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பில் 173 உறுப்பினர்கள் இம்ரான்கான் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்றால் ஆட்சி கவிழும்.

உரையாற்றும் இம்ரான்கான்

உரையாற்றும் இம்ரான்கான்

இதனால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாகவே இம்ரான்கான் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே இன்று அவர் மக்கள் மத்தியில் பேச உள்ளார். இந்த பேச்சை தொடர்ந்து அவர் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.

ஒரு ஆட்டம் உள்ளது

ஒரு ஆட்டம் உள்ளது

இந்நிலையில் தான் இம்ரான்கான் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என்று பாகிஸ்தானின் தகவல் மற்றும் தொடர்பு துறை அமைச்சர் பவாத் சவுதிரி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ‛‛இம்ரான்கான் கடைசி பந்து வரை போராடக்கூடிய வீரர். இவர் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை. நண்பர்களும், எதிரிகளும் பார்க்கும் வகையில் ஒரு ஆட்டம் உள்ளது' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+