இந்தியாவில் அல் கொய்தா இருப்பதற்கான ஆதாரம் இல்லை: அமெரிக்க நிபுணர்
நியூயார்க்: இந்தியாவில் அல் கொய்தா அமைப்பு இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என அமெரிக்காவைச் சேர்ந்த தீவிரவாத தடுப்பு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கிளை துவங்கப் போவதாக தெரிவித்து அல் கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது குறித்து மத்திய அரசு உளவுத் துறையிடம் அறிக்கை கேட்டுள்ளது. மேலும் உளவுத் துறை மாநில அரசுகளை உஷாராக இருக்குமாறு எச்சரித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த தீவிரவாத தடுப்பு நிபுணரான பீட்டர் பர்கன் கூறுகையில்,

இந்தியா
இந்தியாவில் ஜவாஹிரி அல் கொய்தா கிளையை துவங்குவது வேடிக்கையானது. இந்தியாவில் ஜிஹாதிக்கள் உள்ளனர். ஆனால் அல் கொய்தாவினர் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை.

ஜவாஹிரி
அனைவரும் ஐஎஸ்ஐஎஸ் பற்றி தான் பேசுகிறார்கள், அல் கொய்தா பற்றியோ ஜவாஹிரி பற்றியோ பேசுவது இல்லை. அதனால் அவரை பற்றி நாம் பேச வேண்டும் என்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.

அல் கொய்தா
தாங்கள் கடந்த காலத்து கதையாகிவிட்டோம் என்பது அல் கொய்தாவினருக்கே தெரியும். அந்த வீடியோவில் ஜவாஹிரி பேசுவது போராக உள்ளது. அவராக அரை மணிநேரத்திற்கும் மேலாக பேசுகிறார்.

ஐஎஸ்ஐஎஸ்
அல் கொய்தாவை விட மீடியாக்கைள கையாள்வதில் ஐஎஸ்ஐஎஸ் திறமையாக உள்ளது. தங்களுக்கான இடம், பணம், ஆட்கள், மற்றும் மத்திய கிழக்கில் தங்கள் அமைப்பை விரிவு செய்வதில் ஐஎஸ்ஐஎஸ் வெற்றி பெற்றுள்ளது என்று பீட்டர் தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications