நேற்றுதான் தென்னாப்பிரிக்காவை வாழ்த்தினார்.. கசிந்தது கிம் ஜோங் உன் எழுதிய கடிதம்.. புதிய திருப்பம்!
வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் நேற்று காலை தென்னாபிரிக்கா அதிபர் சிரில் ராமபோஷாவிற்கு எழுதிய கடிதம் ஒன்றை வடகொரியா ஊடங்கங்கள் வெளியிட்டுள்ளது.
பியாங்யாங்: வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் நேற்று காலை தென்னாபிரிக்க அதிபர் சிரில் ராமபோஷாவிற்கு எழுதிய கடிதம் ஒன்றை வடகொரியா ஊடங்கங்கள் வெளியிட்டுள்ளது. கிம் ஜோங்கிற்கு எதுவும் ஆகவில்லை என்பதை உணர்த்துவதற்காக வடகொரியா ஊடங்கங்கள் இந்த கடிதத்தை வெளியிட்டுள்ளது.
Recommended Video
வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் உடல் நிலை குறித்து கடந்த ஒரு வாரமாகவே நிறைய செய்திகள், வதந்திகள் வெளியாகி வந்தது. அவர் மிக மோசமான உடல்நிலையுடன் இருப்பதாக அமெரிக்கா செய்தி ஊடகமான சிஎன்என்உட்பட பல்வேறு செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தது.
கிம் ஜோங் உன்னுக்கு கடந்த 12ம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின் அவரின் உடலின் மோசமானதாக கூறப்பட்டது. வடகொரியாவின் இருக்கும் வோன்சோன் நகரத்தில் கிம் இருப்பதாக செய்திகள் வந்தது. அங்கு கிம் குடும்பத்திற்கு சொந்தமான ரிசார்ட் ஒன்று இருக்கிறது.

திடீர் திருப்பம்
அங்கு அவர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வந்தது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் நேற்று காலை தென்னாபிரிக்கா அதிபர் சிரில் ராமபோஷாவிற்கு எழுதிய கடிதம் ஒன்றை வடகொரியா ஊடங்கங்கள் வெளியிட்டுள்ளது. கிம் ஜோங்கிற்கு எதுவும் ஆகவில்லை என்பதை உணர்த்துவதற்காக வடகொரியா ஊடங்கங்கள் இந்த கடிதத்தை வெளியிட்டுள்ளது. நேற்று தென்னாபிரிக்காவின் சுதந்திர நாள் ஆகும்.

கடிதம் எழுதினார்
நேற்று தென்னாபிரிக்காவில் அந்த நாள் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவின் சுதந்திர நாளுக்காக கிம் ஜோங் உன் இந்த கடித்தை எழுதி உள்ளதாக வடகொரியா ஊடங்கங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. அந்த கடிதத்தையும் வெளியிட்டுள்ளது. தென்கொரியாவின் வளர்ச்சியில் தென்னாப்பிரிக்கா பெரிய பங்கு வகித்துள்ளது. இரண்டு நாட்டின் வளர்ச்சி மிகவும் முக்கியம்.

இரண்டு நாடுகள் எங்கே
இரண்டு நாடுகளும் ஒன்றாக சேர்ந்து முன்னேற்றம் அடையும். இரண்டு நாடுகளும் கலாச்சார, பொருளாதார ரீதியாக நிறைய ஒற்றுமைகளை கொண்டு இருக்கிறது என்று கிம் ஜோங் உன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் இந்த கடிதத்தின் உறுதி தன்மையை வேறு நாடுகள் எதுவும் உறுதிப்படுத்தவில்லை. அதேபோல் தென்னாப்பிரிவிக்காவும் இது தொடர்பாக எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.

இன்னொரு கடிதம் எழுதினார்
அதேபோல் நேற்று கிம் ஜோங் வடகொரியாவின் வான்சான் பகுதியில் சுற்றுலா தள கட்டுமான பணியில் ஈடுபட்டு பணியாளர்களை வாழ்த்தி கடிதம் எழுதியதாகவும் ஒரு கடிதம் வெளியானது. கிம் ஜோங் வடகொரியாவின் வான்சான் பகுதியில்தான் தங்கி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அங்கிருக்கும் கட்டிட தொழிலாளர்களுக்கு இவர் வாழ்த்து கடிதம் எழுதியதாக செய்தி வெளியானது.

உண்மைதன்மை
ஆனால் இந்த கடிதத்தின் உண்மைதன்மை குறித்தும் எந்த தகவலும் உறுதி செய்யப்படவில்லை. அவருக்கு என்ன ஆனது என்பது தொடர்பாக் இன்னும் வடகொரியஊடங்கங்கள் நிறைய ரகசியம் காத்து வருகிறது. அதிகாரபூர்வமாக எந்த விதமான தகவலையும் இன்னும் வடகொரியா வெளியிடவில்லை. வடகொரியா அதிபர் உயிர் குறித்து நிறைய செய்திகள், தகவல்கள் உலவிய வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் அவர் எழுதியதாக இரண்டு கடிதங்கள் உலவ தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications