“பூதம்” - அது நம்மை நோக்கிதான் வருது.. வேலையை காட்டிய வடகொரியா? “ஆடிப்போன” ஜப்பான் -மக்கள் “அலர்ட்”
டோக்கியோ: வட கொரியா அடையாளம் தெரியாத புதிய வகை கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணை சோதனை செய்ததாக ஜப்பான் குற்றம்சாட்டி இருக்கிறது.
பசிபிக் தீபகற்பத்தில் அமைந்திருக்கும் முக்கிய நாடான வடகொரியா அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகள், மேற்கத்திய நாடுகளுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. தொடர்ந்து பலமுறை ஏவுகணை சோதனையும் நடத்தி வருகிறது.
அதேபோல் அண்டை நாடான தென் கொரியாவையும் வட கொரியா அச்சுறுத்தி வருகிறது. அணு ஆயுத சோதனைக்கு தடை விதிக்கப்பட்டாலும் வட கொரியா அதை ஏற்காமல் சோதனைகளை தொடர்ந்து வருகிறது.

வட கொரியா
வட கொரியாவுடனான மோதல் போக்கை கைவிட அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்து அமைதிப் பேச்சுவார்த்தையும் நடத்தினார். அதன் பின்னர் ஏவுகணை சோதனைகளை குறைத்த வடகொரியா, மீண்டும் அதை தொடங்கி இருக்கிறது.

மீண்டும் தீவிரம்
இந்த ஆண்டின் தொடக்கத்திலும், பிப்ரவரி, மார்ச் மாதங்களிலும் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் பலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்திக் காட்டியது வடகொரியா. இந்த நிலையில் தற்போது தென் கொரியா மற்றும் ஜப்பானுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஆயுத சோதனைகளை வட கொரியா முடுக்கிவிட்டுள்ளது.

கொரிய தீபகற்பம்
எனவே கொரிய எல்லையில், அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளின் கடற்படைகள் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக 3 நாடுகளையும் அச்சுறுத்தும் விதமாக அடுத்தடுத்து வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. கடந்த 25 ஆம் தேதி தேதியிலிருந்து 3 முறை ஏவுகணை சோதனையை நடத்தி இருக்கும் வட கொரியா 4 வது முறையாக இன்று சோதனை நடத்தியுள்ளது.

அதிர்ந்த ஜப்பான்
அடையாளம் தெரியாத கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் பலிஸ்டிக் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தி இருப்பதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை ஜப்பான் எல்லையின் மேற்பரப்பில் பறந்ததாக தெரிவித்துள்ள அந்நாட்டு பிரதமர் அலுவலகம், மக்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications