3-வது உலக போருக்கு விதை போடும் வட கொரியா.. அமெரிக்காவை குறி வைக்கும் அதி நவீன ஏவுகணை ரெடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்கா தலைநகர் வாஷிங்டன் வரை சென்று தாக்கும் நவீன ஏவுகணை சோதனையில் அதன் 'எதிரி' நாடான வடகொரியா ஈடுபட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் இதுபற்றி பரபரப்பாக பேசப்படுகிறது. ஜப்பான் பிரதமராக ஷின்சோ அபே இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஜப்பானுக்கு செல்ல உள்ளார்.

ட்ரம்ப்பின் வருகையின்போது அவரை எரிச்சலூட்டும் விதமாக ஏவுகணை சோதனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அதிக தூரம்

அதிக தூரம்

வடகொரியா கண்டம்விட்டு கண்டம் பாயும் புதிய ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது என்ற தகவல் வெகுநாட்களாக உலவுகிறது. வடகொரியா உருவாக்கிவரும் கேஎன்- 20 என்ற புதிய ஏவுகணை மிக அதிக தூரம் பாயக்கூடியதாம்.

பலத்தை காட்ட திட்டம்

பலத்தை காட்ட திட்டம்

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் வரை சென்று தாக்கும் சக்தி கொண்டது இந்த ஏவுகணை. இந்த புதிய ஏவுகணை சோதனையின் மூலம் தனது பலத்தை உலக நாடுகளுக்கு காண்பிக்க அதிபர் கிம் ஜோங்க் உன் ஆர்வத்தோடு உள்ளாராாம்.

ட்ரம்ப் ஜப்பான் பயணம்

ட்ரம்ப் ஜப்பான் பயணம்

ஜப்பான் பிரதமராக ஷின்சோ அபே இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே இரு நாட்டு உறவை பலப்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரும் ஞாயிறன்று, ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார். அப்போது, வட கொரியாவின் ஏவுகணை விவகாரம் விவாதப்பொருளாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடுப்பேற்றவே சோதனை

கடுப்பேற்றவே சோதனை

ஜப்பானுக்கு ட்ரம்ப் சுற்றுப்பயணம் செல்லும் நிலையில், புதிய ஏவுகணை சோதனைகளை வடகொரியா தீவிரகதியில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் பேசப்படுகிறது. இப்படி நடந்தால் அது 3வது உலக போருக்கு வித்திடும் என பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
North Korea are working on an update to their Intercontinental ballistic missiles, allowing the weapons to reach the UK and the entire USA, it has been revealed.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற