Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொரோனா என்னவெல்லாம் செய்யுமோ.. களம் இறங்கிய உலகின் போதைப்பொருள் கடத்தல் மன்னன் எல் சாப்போவின் மகள்

Subscribe to Oneindia Tamil

மெக்ஸிகோ: பல நூறு ஆண்டுகளிலேயே உலகம் கண்ட மிக மோசமான தொற்றுநோய் என்றால் அது கொரோனா வைரஸ தான். இதை எதிர்த்து உலகின் மிக அபாயகரமான ஆபத்தானவர்கள் கூட போராடுகிறார்கள்.

மிக பயங்கரமான உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் மன்னன் எல் சாப்போவின் மகள் மற்றும் போதை பொருள் கடத்தல்காரர்கள் மெக்ஸிகோவில் கொரோனா வைரஸ் எதிர்த்து போராடி வருகிறார்கள். தனத தந்தை எல் சாப்பாவின் உருவம் பொறித்த அட்டைப்பெட்டியில் அந்நாட்டு மக்களுக்கும் தேவையான உணவு, மாஸ்க், கையுறை, சோப்பு மற்றும் பிற மருத்துவ பொருட்களை உலகிற்கு வழங்கி வருகிறார்.

மெக்சிகோவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் போதைப்பொருள் அரசனான எல் சாப்போவின் மகள் நடத்தி வரும் எல் சாப்போ 701 நிறுவனத்தின் அலெஜான்ட்ரினா குஸ்மான் என்ற இணையதள முகவரி பொறிக்கப்பட்டிருப்பதுடன் எல் சாப்போவின் புகைப்படும் பொறிக்கப்பட்ட அட்டை பெட்டியில், உணவு, முகமூடிகள், கை சோப்புகள் மற்றும் பிற பொருட்களைக் கொண்ட பராமரிப்பு பெட்டிகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்டுகிறது

மதுபானங்கள் விற்பனை

மதுபானங்கள் விற்பனை

எல் சாப்போவின் மகள் நடத்தி வரும் எல் சாப்போ 701 நிறுவனம் ஆடை மற்றும் மதுபானங்களை சட்டப்பூர்வமாக விற்கிறது. இந்த எல் சாப்போ 701 என்ற பிராண்ட் பெயருக்கு பின்னணியில் சுவாரஸ்யமான காரணம் உள்ளது. 2009ம் ஆணடு ஃபோர்ப்ஸ் பட்டியலில் எல் சாப்போ உலகின் 701 வது பணக்காரர் என்று மதிப்பிடப்பட்டார். அதையே தனது நிறுவனத்திற்கு எல் சாப்போ பெயராக வைத்தார்.

கடத்தல் மன்னன்

கடத்தல் மன்னன்

இன்றைக்கு கொரோனாவுக்கு எதிராக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று வீட்டு வீட்டுக்கு எல் சாப்போ பெயரில் கையேடுகள் வழங்கப்படுகிறது. இந்த எல் சாப்போ யார் என்றால் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஆவார். அத்துடன் சினலோவா கார்டலின் முன்னாள் தலைவரும் ஆவார். எல் சாபோ உலகின் மிக சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். அவர் கைது செய்யப்பட்ட நேரத்தில், சினலோவா கார்டெல் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் செல்வசெழிப்பான நிறுவனமாக இருந்தது.

ஆரம்பகால வாழ்க்கை

ஆரம்பகால வாழ்க்கை

எல் சாப்போ என்று அழைக்கப்படும் அலெக்சாண்ட்ரியா குஸ்மான் சினலோவாவில் ஒரு ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். அவர் 1970 களின் பிற்பகுதியில் ஹெக்டர் லூயிஸ் பால்மா சலாசருடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். அவர் சினலோவா வழியாக அமெரிக்காவிற்கு போதை மருந்துகளை கடத்தி வந்தார் . பின்னர் அவர் 1980 களில் மிகுவல் ஏஞ்சலுவுடன் இணைந்தார். ஆனால் ஏஞ்சல் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சாப்போ 1988 இல் தனது சொந்தமாக போதை மருந்துகளை தயாரிக்க தொடங்கினார்.

ஹெராயின் போதை

ஹெராயின் போதை

கோகோயின், மெத்தாம்பேட்டமைன், மரிஜுவானா மற்றும் ஹெராயின் ஆகியவற்றை உற்பத்தி செய்து நாடு கடத்தி , அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் விநியோகித்தார். போதை மருந்துகளை கடந்த அவர் எல்லைகளுக்கு அருகே நீண்ட தூர சுரங்கங்களைப் பயன்படுத்தினார், இது அவருக்கு அதிகமான மருந்துகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய உதவியது.

 மீண்டும் கைது

மீண்டும் கைது

இதன் காரணமாகவே 2001 ல் கைது செய்யப்பட்ட பின்னர், அவர் சிறையிலிருந்து தப்பிக்கவும் முடிந்தது. அவர் இரண்டாவது முறையாக சிறையில் இருந்து தப்பித்தது இன்றும் பேசப்படும் விஷயமாக உள்ளது. 2015 ஆம் ஆண்டில், ஒரு சுரங்கப்பாதை வழியாக தப்பித்தார். பாதுகாப்பு கேமராக்களிலேயே தெரியாத பகுதி அவர் வசித்த மலை பகுதியாகும். சிறையில் இருந்து தப்பிய சாப்போ ஜனவரி 8, 2016 அன்று கைது செய்யப்பட்டார். மெக்ஸிகோ அரசு பின்னாளில் ஜனவரி 19, 2017 அன்று, அவர் அமெரிக்காவிற்கு ஒப்படைத்தது.

Recommended Video

    55 நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்கிறது இந்தியா
    ஆயுள் தண்டனை

    ஆயுள் தண்டனை

    அவருக்கு அனைத்து வழக்குகளிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை மற்றும் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 12.6 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான சொத்துக்களை அவரிடம் இருந்து பறிமுதல் செய்ய நீதிபதி பிப்வரி மாதம் உத்தரவிட்டார். எல் சாப்போ தற்போது தனது தண்டனையை 89914-053 என்ற பெடரல் பதிவு எண் கீழ் அமெரிக்க நாட்டின் மிக பாதுகாப்பான சூப்பர்மேன் சிறைச்சாலையான ஏ.டி.எக்ஸ் புளோரன்சில் அனுபவித்து வருகிறார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+