அது குடுத்தாதான் தூங்குவேன்.. அடம் பிடிக்கும் அப்பல்லோ.. ஆச்சர்யத்தில் நெட்டிசன்கள்!
தனக்கு பிடித்தமான போர்வையை போர்த்திக் கொண்டு உறங்கும் காண்டாமிருகத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
நைரோபி: வனவிலங்கு காப்பகத்தில் வளர்ந்து வரும் குட்டி காண்டாமிருகம் ஒன்று தனக்கு பிடித்தமான போர்வையை போர்த்தாவிட்டால் உறங்க மறுக்கும் வேடிக்கையான சம்பவம் கென்யாவில் நடந்துள்ளது.
பொதுவாக குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு பொருளின் மீது அதீத பிரியம் இருக்கும். அந்த பொருளை தன்னுடனே எப்போதும் வைத்திருப்பார்கள். அந்த பொருளைத் தராவிட்டால், அதை கேட்டு பிடிவாதம் பிடிப்பதை பார்த்திருப்போம்.
ஆனால் மிருகங்கள் அப்படி ஒரு பொருளின் மீது தீரா காதல் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறீர்களா? கென்யாவில் உள்ள ஒரு குட்டி காண்டாமிருகம் தனக்கு பிடித்தமான போர்வையை போர்த்திக்கொண்டு தான் எப்போதும் உறங்குகிறது.

போர்வை
கென்யாவைச் சேர்ந்த ஷெல்ரிக் வனவிலங்குகள் அறக்கட்டளை, காட்டில் அனாதையாக விடப்பட்ட குட்டி காண்டாமிருகத்தை எடுத்து அப்பல்லோ என பெயரிட்டு வளர்த்து வருகிறது. குட்டி என்பதால் கதகதப்பிற்காக அதற்கு போர்வை போர்த்தி பழக்கி இருக்கிறது அந்த அறக்கட்டளை.

அடம் பிடிக்கும் அப்பல்லோ
இதனால் அந்த காண்டாமிருகத்திற்கு தனது போர்வை மீது ஏதோ ஒரு மோகம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அப்பல்லோவுக்கு அந்த போர்வை இல்லை என்றால் தூக்கமே வருவதில்லை. அடம்பிடித்து வாங்கியாவது அந்த குட்டி கொம்பன், போர்வையை தலை வரை போர்த்திக்கொண்டு தான் நிம்மதியாக தூங்குகிறான்.
|
வைரல் வீடியோ
குட்டி காண்டாமிருகம் அப்பல்லோ தனக்கு பிடித்தமான போர்வையை போர்த்திக்கொண்டு தூங்கும் க்யூட் வீடியோவை ஷெல்ரிக் வனவிலங்குகள் அறக்கட்டளை தனது சமூகவலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது. நெட்டிசன்களால் இந்த வீடியோ அதிகமாகப் பகிரப்பட்டுள்ளது.

நெட்டிசன்கள் கவலை
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், குட்டி காண்டாமிருகம் நிம்மதியாக மனிதர்களைப் போலவே போர்த்திக் கொண்டு தூங்குவதைப் பார்த்து அசந்து போயுள்ளனர். அதே சமயம் மீண்டும் காட்டுக்கு சென்றால் இது போன்று போர்வையைப் போர்த்திக் கொண்டு அந்தக் காண்டாமிருகக் குட்டியால் தூங்க முடியாதே என கவலையும் தெரிவித்துள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications