For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க அதிகாரி வெளியிட்ட புது தகவல்.. பின்லேடனுக்கு மகன் எழுதிய கடிதத்தத்தில் பகீர்

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஒசாமா பின்லேடனின் மகன் எழுதிய கடிதம் குறித்த திடுக்கிடும் தகவலை அமெரிக்க விசாரணை அமைப்பான எப்.பி.ஐ முன்னாள் அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான 60 நிமிடங்கள் என்ற நிகழ்ச்சியில், முன்னாள் எப்.பி.ஐ அதிகாரி அலி சௌஃபான் என்பவர் அளித்த பேட்டியில் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவராக இருந்த ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா தனது தந்தை வழியில் மேற்கத்திய நாடுகளை அழித்துக்கட்டுவதாக உறுதியளித்த தகவல் இதனால் அம்பலமாகியுள்ளது.

பின்லேடன்

பின்லேடன்

2011ம் ஆண்டில் பாகிஸ்தானின் அப்போதாபாத் நகரில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்தபோது, இரவோடு இரவாக ஹெலிகாப்டரில் உள்ளே நுழைந்த அமெரிக்க நேவி சீல் படையினரால் பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கடிதம்

கடிதம்

அப்போது அந்த வீட்டில் இருந்து ஹம்சா எழுதிய கடிதம் மீட்கப்பட்டுள்ளது. அதில் தனது தந்தையின் வழியில் தான் நடப்பேன் என உறுதியளித்து ஹம்சா எழுதிய கடிதமும் பறிமுதல் செய்யப்பட்டது.

ஜிகாத்

ஜிகாத்

உங்கள் சிரிப்பு, உங்களின் முகம், நீங்கள் எனக்கு சொல்லிக்கொடுத்த வார்த்தைகள் அனைத்துமே நினைவிருக்கிறது. நான் இரும்பால் உருவானவனாக நினைத்துக்கொள்கிறேன். கடவுளுக்காக வாழ்வதே ஜிகாதிகள் வாழ்க்கை என அதில் கூறப்பட்டுள்ளது.

ஆடியோ வெளியீடு

ஆடியோ வெளியீடு

இந்த கடிதத்தை எழுதியபோது ஹம்சாவுக்கு 22 வயது இருக்கலாம் என கூறப்படுகிறது. ஐரோப்பிய நாடுகள் மீதான அல்கொய்தா தீவிரவாதிகளின் தாக்குதல்களின்போது, ஹம்சா இதற்கான கட்டளையை பிறப்பித்த ஆடியோக்களை இங்கிலாந்து போலீசார் வெளியிட்டிருந்தனர்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

தந்தையின் வழியில் ஹம்சா, உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்க கூடும் என அலி சௌஃபான் எச்சரிக்கைவிடுத்துள்ளார். தந்தையின் சாவுக்கு, அலி சௌஃபான் பழிவாங்க முயலக்கூடும் என்று எச்சரித்துள்ளார் அவர்.

English summary
Hamza is hell-bent on avenging the death of his father, Osama Bin Laden. The revelation was made by a former FBI agent who is familiar with the personal letters seized during the raid that killed Laden, the leader of the al-Qaeda.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X