For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்னை இந்தியாவுக்கு நாடு கடத்த பெருமுயற்சி செய்து தோற்றார் ப.சி.: லலித் மோடி

By Siva
Google Oneindia Tamil News

லண்டன்: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனக்கு எதிராக அரசியல் பழிவாங்கும் முயற்சியில் ஈடுபட்டதாக ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் மோசடி புகாரில் சிக்கிய ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி நாட்டை விட்டு ஓடி இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இங்கிலாந்தில் வசித்து வரும் அவருக்கு உதவி செய்ததாகக் கூறி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

P. Chidambaram tries to deport me to India: Lalit Modi

இந்நிலையில் லலித் மோடியோ தனக்கு பல அரசியல் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது என்று பெருமையாக தெரிவித்துள்ளார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,

அது ப.சிதம்பரம் தான். மிஸ்டர் ப.சிதம்பரம் தான் என்னை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த முயற்சி செய்தார். எல்லாம் என்னை பழிவாங்கவே அவ்வாறு செய்தார். சட்டப்படி என்னை நாடு கடத்த முடியவில்லை. அதனால் அவர் வேறு வழியில் முயற்சி செய்தார். அப்படியும் அவரால் முடியவில்லை.

அவர் டெல்லியில் அமைச்சராக இருந்ததால் தான் இத்தனையும் செய்தார். அவரின் செயலுக்கு அரசியல் பழிவாங்கும் நோக்கம் மட்டுமே காரணம் என்றார்.

English summary
Lalit Modi, former IPL chairman told that former central minister P. Chidambaram tried to deport him to India out of political vendatta.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X