பாகிஸ்தான் அதிபராகிறாரா அசீம் முனீர்? பிரேசிலில் வாயை விட்ட ராணுவ தளபதி! பெரிய ட்விஸ்ட்
இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருக்கும் அசீம் முனீர் விரைவில் அந்த நாட்டின் அதிபராக பொறுப்பேற்க உள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தான் பாகிஸ்தான் அதிபர் பதவி, அரசியலில் நுழைவது பற்றி அசீம் முனீர் கூறிய விஷயம் தற்போது பாகிஸ்தானில் கவனம் பெற்றுள்ளது.
நம் நாட்டின் பரம எதிரியான பாகிஸ்தானில் அடிக்கடி ஆட்சியை ராணுவ தளபதிகள் கைப்பற்றுவது நடந்து வருகிறது. தற்போது பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீஃப் உள்ளார். பாகிஸ்தான் அதிபராக ஆசிப் அலி சர்தாரி செயல்பட்டு வருகிறார்.

சமீபத்தில் நம் நாட்டுடன் நடந்த போரில் பாகிஸ்தான் மண்ணை கவ்வியது. ஆனாலும் கூட பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீருக்கு ஃபீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்பட்டது.
இதையடுத்து, தான் பாகிஸ்தான் அதிபர் பதவியை அவர் கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக கடந்த ஜூன் மாதம் முதல் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தான் அதிபர் விவகாரம் பற்றி அசீம் முனீர் விளக்கம் அளித்துள்ளார். சுகைல் வாரைச் என்பவர் ஜங்க் மீடியா குழுவில் கட்டுரைகளை எழுதி வருகிறார். இப்போது அவர் அசீம் முனீர் கூறியுள்ளதாக கட்டுரை ஒன்றை எழுதி உள்ளார். ஜங் தினசரி உருது நாளிதழில் அவர் எழுதியுள்ளதாவது:
‛‛பிரேசில் நாட்டின் புரஸ்ஸல்ஸ் நகரில் அசீம் முனீரை சமீபத்தில் சந்தித்தேன். அமெரிக்கா பயணத்தை முடித்து பிரேசில் வந்தார். அப்போது தான் இந்த சந்திப்பு நடந்தது. 2 மணிநேரம் நாங்கள் விவாதித்தோம். அரசியல் பற்றி விவாதித்தோம். பாகிஸ்தான் அதிபர் மற்றும் பிரதமர் மாற்றம் பற்றி பேசினோம். அப்போது அசீம் முனீர் உறுதியாக ஒரு விஷயத்தை தெரிவித்தார். அதிபர் மாற்றம், பிரதமர் மாற்றம் என்பது முழுக்க முழுக்க கட்டுக்கதை, யூகம் என்று அவர் தெரிவித்தார்.
இந்த கட்டுக்கதையின் பின்னணியில் சிலர் உள்ளனர். அவர்கள் அரசு மற்றும் அதிகாரம் படைத்தவர்களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்களாக உள்ளனர். இவர்கள் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த கதையை பரப்பினர். நாட்டை பாதுகாக்கும் பொறுப்பை அல்லா எனக்கு கொடுத்துள்ளார். இதுதவிர எனக்கு வேறு எந்த ஆசையும் இல்லை. '' என கூறியுள்ளார்.
இந்த சமயத்தில், அரசியலில் என்ட்ரி கொடுப்பது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அசீம் முனீர், ‛‛நேர்மையான மன்னிப்பு குணம் இருந்தால் மட்டுமே அரசியல் சாத்தியம்'' என்றார். முன்னதாக, அசீம் முனீர் அதிபராவதாக வெளியான தகவலை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், உள்விவகாரத்துறை அமைச்சர் மோஷின் நக்வி உள்ளிட்டவர்கள் மறுத்து இருந்தனர். இப்போது அசீம் முனீரும் அதிபர் மாற்றமில்லை என்று கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications