இந்தியா + அரக்கன் ஆர்மி டார்க்கெட்.. சொந்தமாக தீவிரவாதிகளை உருவாக்கும் வங்கதேசம்! உதவும் பாகிஸ்தான்
டாக்கா: இந்தியா - வங்கதேச உறவில் விரிசல் விழுந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்தியா மற்றும் அரக்கன் ஆர்மியை மிரட்ட வங்கதேச இடைக்கால அரசு தீவிரவாத குழுக்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-விடம் இருந்து ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்படுவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதன் பின்னணியில் ரோஹிங்கியா பிரிவினரை வைத்து 2 பெரிய விஷயங்களை சாதிக்க வங்கதேச அரசின் இடைக்கால தலைவர் முகமது யூனுஷ் திட்டமிட்டுள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் ஒரு பகுதியாக இருந்த கிழக்கு பாகிஸ்தான் தான் தற்போது வங்கதேச நாடாக செயல்பட்டு வருகிறது. தனி நாடு வேண்டி போராடியபோது பாகிஸ்தானை எதிர்த்து நம் நாட்டு ராணுவத்தினர் போரிட்டனர். நம் நாட்டின் உதவியுடன் தான் வங்கதேசம் என்ற நாடே உருவானது.இதனால் நம் நாட்டுடன் நீண்டகாலமாக அந்த நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா நட்புடன் செயல்பட்டார்.

ஆனால் சமீபத்தில் வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். தற்போது வங்கதேசத்தில் இடைக்கால அரசு என்பது செயல்பட்டு வருகிறது. இந்த அரசின் தலைமை ஆலோசகராக நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஷ் உள்ளார். இவர் தலைமையில் தான் இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது.
முகமது யூனுஷ் அதிகாரத்துக்கு வந்தது முதலே நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறார். இதனால் இருநாடுகள் இடையேயான உறவில் கடுமையாக விரிசல் ஏற்பட்டுள்ளது. வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீதான தாக்குதல், கோவில்கள் சூறையாடும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதில் நடவடிக்கை எடுக்காமல் முகமது யூனுஷ் வேடிக்கை பார்க்கிறார். இதுதவிர முகமது யூனுஷ் அரசு நம்மை எதிரியாகவும், சீனா, பாகிஸ்தானை நண்பர்களாகவும் பார்க்கிறது. குறிப்பாக பாகிஸ்தானை எதிர்த்து போரிட்டு தனி நாடாக பிரிந்ததை மறந்து அவர் நட்பு பாராட்டி வருகிறார். இது நம் நாட்டுக்கு பிரச்சனையாகவே பார்க்கப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க சமீபத்தில் மியான்மரை மையப்படுத்தி செயல்பட்டு வரும் அரக்கன் ஆர்மி என்ற ஆயுத குழுவினர், வங்கதேசத்தின் சில பகுதிகளை கைப்பற்றினர். இந்த அரக்கன் ஆர்மி என்பவது ஒரு கிளர்ச்சி குழு. இவர்கள் மியான்மர் - வங்கதேச எல்லையில் மியான்மருக்கு சொந்தமான ரக்கைன், சின் பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. தங்களுக்கென்று தனிநாடு உருவாக்க வேண்டும் என்பது தான் அரக்கன் ஆர்மியின் நோக்கமாகும். இதற்கிடையே தான் சில நாட்களுக்கு முன்பு அரக்கன் ஆர்மி வங்கதேசத்தில் தெக்னாப் மாகாணத்தின் சில இடங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
தற்போது வரை அரக்கன் ஆர்மி சார்பில் வங்கதேசத்தில் தாக்குதல் நடத்தவில்லை. அதேவேளையில் தங்களின் எதிரிகளான ரோஹிங்கா முஸ்லிம்கள் மற்றும் ரோஹிங்கா கிளர்ச்சி குழுக்களுக்கு வங்கதேசம் ஏதேனும் உதவி செய்தால் தாக்குதலை தொடங்குவோம் என்று அரக்கன் ஆர்மி எச்சரித்துள்ளது. இது வங்கதேசத்துக்கு பெரும் தலைவலியாக உள்ளது. தற்போது வரை ரோஹிங்கா குழுவினருக்கு வங்கதேச அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்று அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அதேவேளையில் ரோஹிங்கா அமைப்பை சேர்ந்த அபு அம்மான் ஜினுனி வெளியிட்ட அறிக்கையில், ‛‛வங்கதேச ராணுவம் செய்த உதவிக்கு நன்றி'' என்று கூறியுள்ளார். இது வங்கதேச அரசு வெளியிட்ட தகவலுக்கு எதிராக உள்ளது.
இப்படி இருதரப்புக்கும் இடையேயான முரண்பட்ட தகவல் என்பது விவாதமாகி உள்ளது. இதனால் அரக்கன் ஆர்மி எப்போது வேண்டுமானாலும் வங்கதேசம் மீது தாக்குதல் நடத்தலாம் என்று சொல்லப்படுகிறது. இது வங்கதேசத்தின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. மேலும் அரக்கன் ஆர்மி தொடர்ந்து முன்னேறினால் அது வங்கதேச மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். இதனால் அரக்கன் ஆர்மியை ஒழித்து கட்ட முகமது யூனுஷ் புதிய திட்டத்தை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக பாகிஸ்தானுடன் சேர்ந்து அவர் சதித்திட்டம் ஒன்றை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பாகிஸ்தான் எப்படி தனது நாட்டின் பாதுகாப்புக்காக தீவிரவாதிகளுக்கு ஆயுதம் கொடுத்து அடைக்கலம் வழங்குகிறதோ, அதேபோல் வங்கதேசத்தில் உள்ள கிளர்ச்சி குழுக்களுக்கு ஆயுதத்துடன் பயிற்சி வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்படும் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது பாகிஸ்தான் ஐஎஸ்ஐ என்ற அரசின் உளவு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் உள்ளவர்கள் பாகிஸ்தான் நாட்டை பாதுகாக்கும் வகையில் உளவு தகவல்களை சேகரித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். ஆனால் இப்போது ஐஎஸ்ஐ அமைப்பு சார்பில் வங்கதேசத்துக்கு ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்படுகிறதாம். இந்த ஆயுதங்களை பயன்படுத்தி முகமது யூனுஷ் ரோஹிங்கா பிரிவை சேர்ந்தவர்களை இணைத்து பயங்கரவாத குழுக்களை உருவாக்க உள்ளதாக பத்திரிகை செய்திகள் வெளியாகி உள்ளன.
அதாவது வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் பகுதியில் தான் ரோஹிங்கா முஸ்லிம்கள் அதிகம் உள்ளனர். மியான்மரில் இருந்து அகதிகளாக செல்லும் ரோஹிங்கா முஸ்லிம்கள் காக்ஸ் பஜாரில் தான் தங்க வைக்கப்படுகின்றனர் இங்கு தான் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பயங்கரவாதிகள் சார்பில் ரோஹிங்கா பிரிவினருக்கு தீவிரவாத பயிற்சிஅளிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பயிற்சிக்காக பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அனுப்பும் ஆயுதங்கள் சிட்டகாங்கில் இருந்து தினமும் காக்ஸ் பஜாருக்கு கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு செல்லப்படுகிறதாம். இதனை வங்கதேசத்தில் மூத்த பத்திரிகையாளர் சலாலதீன் சோயிப் சவுத்ரி உறுதி செய்துள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛கடந்த சில வாரங்களாக ஏஆர்எஸ்ஏ, ஆர்எஸ்ஓ பிரிவினருக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ-யிடம் இருந்து அதிகநவீன ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் வருகின்றன. இவர்கள் அரக்கன் ஆர்மிக்கு கடும் பதிலடி கொடுக்க திட்டமிட்டுள்ளனர். அதேபோல் அரக்கன் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் ஷரியா சட்ட ஆட்சியை கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்'' என்று தெரிவித்துள்ளார்.
அதன்படி தற்போது வங்கதேசத்தில் ஏஆர்எஸ்ஏ (ARSA அல்லது Arakan Rohingya Salvation Army) மற்றும் ஆர்எஸ்ஓ (RSOஅல்லது Rohingya Solidarity Organisation ) என்று 2 ரோஹிங்கா பிரிவை சேர்ந்த கிளர்ச்சி குழுக்கள் உள்ளன. இவர்களுக்கு தான் தற்போது பாகிஸ்தான் ஆயுதங்களின் உதவியுடன் முகமது யூனுஷ் பயிற்சி வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த 2 குழுக்களுக்கும், அரக்கன் ஆர்மிக்கும் இடையே மியான்மர் விவகாரத்தில் ஏற்கனவே பிரச்சனை உள்ளது. இதனை சாதகமாக்கி அரக்கன் ஆர்மிக்கு எதிராக ஏஆர்எஸ்ஏ மற்றும் ஆர்எஸ்ஓ கிளர்ச்சி படையை கொம்புசீவி விடுகிறார் முகமது யூனுஷ்.
இதில் ஏஆர்எஸ்ஏ அமைப்பை மியான்மர், மலேசியா நாடுகள் தீவிரவாதிகளாக பட்டியலிட்டுள்ளன. அதேவேளையில் ஆர்எஸ்ஓ இன்னும் ஆயுதக்குழுவாக தான் செயல்பட்டு வருகிறது. இந்த குழுவை பயங்கரவாதிகளாக மாற்றும் பணியில் தான் பாகிஸ்தான் உதவியுடன் முகமது யூனுஷ் ஈடுபடுவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இதன் பின்னணியில் முகமது யூனுஷ் 2 திட்டங்களை போட்டுள்ளார்.
அதாவது ஒன்று அரக்கன் ஆர்மியை ஒழித்து கட்டுவது. அதாவது ரோஹிங்கா பிரிவினரை வைத்து அரக்கன் ஆர்மியிடம் சண்டையிட வைக்க திட்டமிட்டுள்ளார். 2வது இந்தியாவை மிரட்டி பார்ப்பது. அதாவது பாகிஸ்தான் நம் நாட்டுடன் நேரடியாக எப்போதும் மோதலுக்கு வராது. மாறாக லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை வைத்து தான் நம் நாட்டை சீண்டும். அதேபோல் ரோஹிங்கியா பயங்கரவாத குழுவை உருவாக்கினால் அதை வைத்து நம்மை மிரட்ட பார்க்கலாம் என்பது தான் முகமது யூனுஷின் திட்டம் என்கின்றனர் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.












Click it and Unblock the Notifications