For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய விமானி ஒருவரை மட்டுமே கைது செய்துள்ளோம்.. பல்டியடித்த பாகிஸ்தான்

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: இந்தியாவைச் சேர்ந்த ஒரே ஒரு விமானி மட்டுமே தங்கள் வசம் சிக்கியுள்ளதாக கூறி பாகிஸ்தான் ராணுவம் பல்டியடித்துள்ளது.

இரண்டு இந்திய பைலட்டுகள் தங்கள் வசம் சிக்கியதாக, இன்று காலை அறிவித்திருந்த நிலையில் பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டை மாலையிலேயே மாற்றியுள்ளது.

Pakistan makes u turn, says one Indian pilot with them

செம ட்விஸ்ட்.. பாகிஸ்தானை கைவிட்ட சீனா.. இந்தியா, ரஷ்யாவுடன் இணைந்து கூட்டறிக்கை செம ட்விஸ்ட்.. பாகிஸ்தானை கைவிட்ட சீனா.. இந்தியா, ரஷ்யாவுடன் இணைந்து கூட்டறிக்கை

பாகிஸ்தான் ராணுவத்தின், செய்தித் தொடர்பாளரான, மேஜர் ஜெனரல் ஆசிப் காபூர், இன்று காலை நிருபர்களிடம் பேட்டி அளிக்கும்போது, பாகிஸ்தான் நாட்டின் தரைப் படையினர் இந்திய விமானிகள் இருவரை கைது செய்துள்ளனர். அதில் ஒருவர் மிலிட்டரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மற்றொருவர் ராணுவத்தின் பிடியில் உள்ளார். இன்று நடத்தப்பட்ட இந்த நடவடிக்கை சுய பாதுகாப்பு தான். இதில் வெற்றி என்று நாங்கள் எதையும் கொண்டாடப் போவதில்லை என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் பாகிஸ்தானின் செய்தி உண்மைதானா என்பதை விசாரித்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார், இன்று காலை நிருபர்களிடம் கூறியிருந்தார்.

பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்ட இந்திய விமானி அபிநந்தன்... வீடியோவை வெளியிட்டது பாகிஸ்தான் பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்ட இந்திய விமானி அபிநந்தன்... வீடியோவை வெளியிட்டது பாகிஸ்தான்

இதன் பிறகு தகவல்களை உறுதிசெய்து கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில், இந்திய விமானி ஒருவர் மட்டும் பாகிஸ்தானிடம் சிக்கியுள்ளார். அவரை பத்திரமாக இந்தியாவிற்கு அனுப்ப வேண்டும் என்று கூறியது.

இதனிடையே, பாகிஸ்தான், மேஜர் ஜெனரல் ஆசிப் காபூர், இன்று மாலை வெளியிட்ட ட்வீட்டில், இந்திய விமானி ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள, விங் கமாண்டரான அபிநந்தன், ராணுவ நெறிமுறைகளின்படி, நடத்தப்படுகிறார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்தியா கூறியதை போல ஒரே ஒரு விமானம் தான் மாயமாகி உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக ஆசிப் காபூர் காலையில் வெளியிட்ட மற்றொரு ட்வீட்டில், எல்லை தாண்டி வந்த இந்திய விமானப்படை விமானத்தை பாகிஸ்தான் விமானப்படை சுட்டு வீழ்த்தியது. ஒரு விமானம் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் விழுந்தது. மற்றொரு விமானம் இந்திய காஷ்மீரில் விழுந்தது என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், இந்தியாவோ, ஒரே ஒரு விமானம்தான் மாயமானதாக கூறி வருகிறது. மற்றொரு விமானம் இன்று காலை, காஷ்மீரில் விபத்துக்குள்ளானதாக இந்தியா கூறியுள்ளது.

English summary
Pakistan military spokesperson Asif Ghafoor has now (some seven hours after the first false claim) tweeted: "There is only one pilot under Pakistan Army’s custody. Wing Comd Abhi Nandan is being treated as per norms of military ethics."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X