ஒன்னாதான் சுதந்திரம்.. இந்தியாவை பாருங்க வல்லரசாக போகுது! நாம பிச்சை எடுக்குறோம்..பாக். தலைவர் பேச்சு
இஸ்லாமாபாத்: இந்தியா உலக அளவில் தன்னை ஒரு வல்லரசு நாடாக மாற்றுவதற்காக முயற்சித்து வருகிறது.. ஆனால் பாகிஸ்தானோ நமது அரசு திவால் ஆகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக உலக நாடுகளிடம் கையேந்தி பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறது என பேசியுள்ளார் அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான மௌலானா பஸ்லூர் ரகுமான்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பயங்கர வெள்ளம், தவறான பொருளாதாரக் கொள்கை, வரைமுறையில்லாமல் வாங்கிய கடன் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாகிஸ்தான் இன்றைக்கு மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது.

ஆட்சிகள் மாறிய போதிலும் கையிருப்பில் இருந்த அந்நிய செலாவணியும், கஜானாவும் மொத்தமாக காலியானதால் சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் திவாலாகிவிட்டது. இடனையடுத்து உலக நாடுகளின் உதவியை எதிர்பார்த்து காத்துக் கிடக்கிறது.
பாகிஸ்தான்: நிதிப் பற்றாகுறையால் வெளிநாடுகளில் இருந்து உணவுப்பொருட்களை வாங்க கூட பணம் இல்லாத நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது. இதனால் கோதுமை, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இப்போதைய சூழலில், பாகிஸ்தானில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தால் இரு வேளை உணவு உண்பதே கடினமானதாக மாறிவிட்டது.
பிச்சை: இந்த நிலையில் தான் இந்தியாவுடன் பாகிஸ்தானை ஒப்பிட்டு பேசியிருக்கிறார் அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான மௌலானா பஸ்லூர் ரகுமான். அந்நாட்டின் பாராளுமன்றத்தில் பேசிய மவுலானா,"1947 ஆம் ஆண்டு ஒரே கட்டத்தில் இரண்டு நாட்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்றன. ஆனால் தற்போது இந்தியா உலக அளவில் தன்னை ஒரு வல்லரசு நாடாக மாற்றுவதற்காக முயற்சித்து வருகிறது.
பொருளாதார வளர்ச்சி: ஆனால் பாகிஸ்தானோ நமது அரசு திவால் ஆகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக உலக நாடுகளிடம் கையேந்தி பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவோ உலக அரங்கில் வலுவான பொருளாதார வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியான வரும் நிதியாண்டில் ஏழு சதவீதத்தை எட்டும் என உலக நாடுகள் அடித்துச் செல்கின்றன.
உரிமை உள்ளது: ஆனால் நம் நாடான பாகிஸ்தானிலோ பொருளாதாரம் தேக்கமடைந்துள்ளது நாட்டில் இருக்கும் சில சக்திகள் நாட்டியோட வளர்ச்சியை தடுக்கின்றன. நாம் பொம்மை போல செயல்படுகிறோம் நாட்டில் நடக்கும் அநியாயங்களை எதிர்த்து போராடுவதற்கு எதிர்க்கட்சிகளான நமக்கு உரிமை உள்ளது" என பேசியுள்ளார் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications