பல நூறு கோடி செலவு.. இந்தியாவை உளவு பார்க்க பாகிஸ்தானின் புதிய விண்வெளி திட்டம்!
இந்தியாவையும், இந்திய ராணுவத்தின் செயல்பாட்டையும் கண்காணிக்கும் வகையில் பாகிஸ்தான் வரும் ஆண்டில் விண்வெளி திட்டம் ஒன்றை செயல்படுத்த இருக்கிறது.
Recommended Video

இஸ்லாமாபாத்: இந்தியாவையும், இந்திய ராணுவத்தின் செயல்பாட்டையும் கண்காணிக்கும் வகையில் பாகிஸ்தான் வரும் ஆண்டில் விண்வெளி திட்டம் ஒன்றை செயல்படுத்த இருக்கிறது.
இதற்காக அந்த நாடு சாட்டிலைட் அனுப்ப முயற்சி செய்து வருகிறது. இந்த சேட்டிலைட் மூலம் இந்திய ராணுவம் நகரும் இடங்களை எளிதாக கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
இது அந்த நாட்டின் பாதுகாப்பிற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்று அந்நாட்டு அரசு விளக்கம் கொடுத்து இருக்கிறது. போர் வரும் சமயங்களில் உதவும் என்பதற்காக, அவர்களின் விண்வெளி திட்டத்தில் நிறைய ராணுவம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

மாற்றம் செய்ய முடிவு
பொதுவாக பாகிஸ்தான், ராணுவம் தொடர்பான செயற்கைகோள்களை அனுப்பியதே இல்லை. இப்போதும் அவர்கள் நாடு அமெரிக்கா, பிரான்ஸ், சீனா போன்ற நாடுகள் கொடுக்கும் செயற்கைகோள் தகவல்களை நம்பியே இருக்கிறது. இதற்காக பாகிஸ்தான் மிகவும் அதிக அளவில் செலவு செய்கிறது. தற்போது இதைவிட்டுவிட்டு சுயமாக, பாதுகாப்பு துறைக்கு உதவும் வகையில் செயற்கைகோள் அனுப்ப முடிவு செய்துள்ளது.

வேறு சில திட்டங்கள்
இதன் முதற்கட்டமாக சில புதிய செயற்கைகோள்களை அனுப்ப அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி , 200 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் புதிய விண்வெளி திட்டங்களை செயல்படுத்த உள்ளது. ஆனால் என்ன மாதிரியான திட்டம் என்று ரகசியம் காக்கிறது. மேலும் 100 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவில் புதிய பல்நோக்கு செயற்கைகோள் ஒன்றை அனுப்ப முடிவெடுத்து இருக்கிறது.

உளவு பார்க்க முடிவு
இந்நிலையில்தான் அந்நாடு இந்தியாவை உளவு பார்க்க முடிவெடுத்துள்ளது. இந்தியாவை உளவு பார்ப்பதற்காகவ 400 கோடியே 70 லட்சம் ரூபாயை பட்ஜெடில் ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது செயற்கைகோளா, வேறு விண்வெளி திட்டமா என்று அந்நாட்டு அரசு கூறவில்லை. ஆனால் விண்வெளி மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சிகளுக்காக இது உதவும் என்றுள்ளனர்.

விண்வெளி மையம்
ஆனால் பாகிஸ்தான் இந்த வளர்ச்சி பணிகளை இதோடு முடிக்கவில்லை. அந்நாடு புதிதாக விண்வெளி மையம் அமைக்க இருக்கிறது. இஸ்ரோவை விட பெரிய அளவில் இதற்காக கட்டிடம் எழுப்ப உள்ளது. கராச்சி, லாகூர், இஸ்லாமாபாத் ஆகிய இடங்களில் விண்வெளி மையங்கள் அமைக்க சில கோடி ரூபாயை பாகிஸ்தான் ஒதுக்கியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications