8 எருமைகள் உட்பட 100க்கும் மேற்பட்ட அரசு சொத்துக்களை ஏலம் விட்ட பாகிஸ்தான் பிரதமர்.. ஏன் தெரியுமா?
பாகிஸ்தானில் அரசுக்கு சொந்தமான கார்கள், பைக்குகள், ஹெலிகாப்டர்கள் பல ஏலம் விடப்பட்டுள்ளது.
Recommended Video

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அரசுக்கு சொந்தமான கார்கள், பைக்குகள், ஹெலிகாப்டர்கள் பல ஏலம் விடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றுள்ளார். கடந்த மாதம் இம்ரான் கான் பதவியேற்றார்.
பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற பின் இம்ரான் கான் அதிரடியான நடவடிக்கைகளை செய்து வருகிறார். அதன்படி முதல் நாளே, ஆடம்பர கார்களில் அமைச்சர்கள் செல்ல கூடாது என்று ஆணையிட்டார்.
பாகிஸ்தானில் இனி ஒருவருடத்திற்கு ஸ்மார்ட் போன்களை இறக்குமதி செய்ய கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார். தற்போது அடுத்த அதிரடியை செய்துள்ளார்.

எதை எல்லாம்
இந்த நிலையில் பாகிஸ்தானில் இன்று 120க்கும் அதிகமான அரசு கார்கள் ஏலம் விடப்பட்டது. அதேபோல் ஹெலிகாப்டர்கள் சில ஏலம் விடப்பட்டது. மேலும் சில பைக்குகள், பர்னிச்சர்கள் கூட ஏலம் விடப்பட்டது. இதில் 45 கார்கள் புல்லட் புரூப் கார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எருமை மாடு கூட
இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அரசுக்கு சொந்தமான எருமை மாடுகள் கூட ஏலம் விடப்பட்டது. மொத்தமாக 8 எருமைமாடுகள் ஏலம் விடப்பட்டது. பிரதமர் அலுவலகத்தில், சுற்றிக்கொண்டு இருந்த அரசுக்கு சொந்தமான எருமை மாடுகள் ஆகும் இது. இதையும் ஏலம் விட்டு இருக்கிறார்கள்.

ஏன் இப்படி
அங்கு செய்யப்பட்டு வரும் சீர்திருத்த நடவடிக்கையை அடுத்து இந்த ஏலம் நடைபெற்று இருக்கிறது. அரசின் கடன் சுமையை குறைக்கும் வகையில் இந்த ஏலம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் வருவாயை வைத்து கடனை அடைக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்து இருக்கிறது.

எவ்வளவு விற்றனர்
இதன் மூலம் இந்திய மதிப்பில் மொத்தம் 100 கோடி முதல் 120 கோடி ரூபாய் வரை வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பழைய கார்கள் சில ஏலம் போகவில்லை. இதனால், மொத்தமாக 60 கோடி ரூபாய் வரை வருமானம் வந்துள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications