பாக். நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு.. பிரதமராக நீடிக்கிறார் இம்ரான் கான்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட இருந்த நிலையில், அந்த தீர்மானத்தை துணை சபாநாயகர் நிராகரித்து இருக்கிறார். இதனால் அந்த தீர்மானம் மீது இப்போது வாக்கெடுப்பு நடத்தப்படாது. இதனால் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் தொடர்ந்து நீடிப்பார்.
பாகிஸ்தான் நாடாளுமன்ற அவை ஆகஸ்ட் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. எனவே அங்கு புதிதாக தீர்மானம் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் எதிர்க்கட்சிகள் உள்ளன.
பாகிஸ்தானில் கடந்த 6 மாதமாக நிலவி வரும் கடுமையான அரசியல் நெருக்கடிக்கு இன்றி முடிவு கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பரபரப்பாக சென்று கொண்டு இருந்த அரசியல் நெருக்கடி இன்று கிளைமேக்ஸை நெருங்குகிறது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடந்த மாதம் இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. பாகிஸ்தானில் நிலவும் கடுமையான பொருளாதார தட்டுப்பாடு, மந்தநிலை, விலைவாசி உயர்வு காரணமாக உட்கட்சிக்கு உள்ளேயே இம்ரான் கானுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வந்தது.

பாகிஸ்தான்
இந்த பொருளாதார தட்டுப்பாடு காரணமாக அங்கு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எண்ணெய் விலை, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 184.79 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அங்கு கடுமையான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலவி வந்தது. அங்கு ராணுவமும் இம்ரான் கானுக்கு ஆதரவாக இல்லை. இதனால் இம்ரான் எப்போது வேண்டுமானாலும் பதவி விலகுவார் என்று செய்திகள் வெளியாகி வந்தன.

இம்ரான் கான்
இந்த நிலையில்தான் பாகிஸ்தான் முஸ்லீம்லீக் என் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய எதிர்க்கட்சிகள் இணைந்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. இம்ரான் கான் பதவி விலக மறுத்த நிலையில் பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. பாகிஸ்தான் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை. கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான முத்தாஹிதா குவாமி மூவ்மென்ட் ஆதரவை வாபஸ் பெற்றது. இந்த நிலையில்தான் பாகிஸ்தான் முஸ்லீம்லீக் என் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய எதிர்க்கட்சிகள் இணைந்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. இம்ரான் கான் பதவி விலக மறுத்த நிலையில் பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. பாகிஸ்தான் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை. கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான முத்தாஹிதா குவாமி மூவ்மென்ட் ஆதரவை வாபஸ் பெற்றது.

நம்பிக்கையில்லா தீர்மானம்
அதேபோல் 22 எம்பிக்கள் ஏற்கனவே ஆளும் கட்சியில் இருந்து விலகி உள்ளனர். அங்கு மொத்தம் 342 எம்பிக்கள் உள்ளனர். இங்கு பெரும்பான்மை பெற 172 எம்பிக்கள் தேவை. ஆனால் ஆளும் இம்ரான் கானின் ஆளும் தெஹ்ரிக் கட்சிக்கு 155 எம்பிக்கள் மட்டுமே உள்ளனர். இதனால் அங்கு இம்ரான் கான் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று இம்ரான் கான் அரசு கவிழ்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் 22 எம்பிக்கள் ஏற்கனவே ஆளும் கட்சியில் இருந்து விலகி உள்ளனர். அங்கு மொத்தம் 342 எம்பிக்கள் உள்ளனர். இங்கு பெரும்பான்மை பெற 172 எம்பிக்கள் தேவை. ஆனால் ஆளும் இம்ரான் கானின் ஆளும் தெஹ்ரிக் கட்சிக்கு 155 எம்பிக்கள் மட்டுமே உள்ளனர். இதனால் அங்கு இம்ரான் கான் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று இம்ரான் கான் அரசு கவிழ்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று வாக்கெடுப்பு
அங்கு ஆட்சி கவிழ்ந்ததும் உடனே தேர்தல் நடத்த இம்ரான் கான் அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று அவை கூடியதும் பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முயன்றன. ஆனால் அவைக்கு துணை சபாநாயகர் குவாஸிம் கான் சுரி இன்று வருகை புரிந்தார். இவர் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட இருந்த நிலையில், அந்த தீர்மானத்தை நிராகரித்தார். இதனால் அந்த தீர்மானம் மீது இப்போது வாக்கெடுப்பு நடத்தப்படாது. இதனால் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் தொடர்ந்து நீடிப்பார்.

ஒத்திவைப்பு
மேலும் பாகிஸ்தான் நாடாளுமன்ற அவை ஆகஸ்ட் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. எனவே அங்கு புதிதாக தீர்மானம் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் எதிர்க்கட்சிகள் உள்ளன. இந்த தீர்மானம் சட்டத்திற்கு எதிரானது. பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்ட விதி 5க்கு எதிரானது இது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதன் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறி அதை துணை சபாநாயகர் நிராகரித்து இருக்கிறார். பாகிஸ்தானில் இம்ரான் ஆட்சி கவிழும் பட்சத்தில் அங்கு முஸ்லீம் லீக் என் கட்சியின் ஷேபாஸ் ஷரீப் தலைமையிலான புதிய கூட்டணி ஆட்சி பதவி ஏற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் நவாஸ் ஷெரீப்பின் தம்பி. ஆனால் இவருக்கு எதிரான பண மோசடி வழக்கில் எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு வரலாம் என்பதால் அவர் பிரதமர் ஆவதும் சந்தேகமாக உள்ளது. பாகிஸ்தானில் கடந்த 6 மாதமாக நிலவி வரும் கடுமையான அரசியல் நெருக்கடிக்கு இன்றி முடிவு கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications