For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாவம்தான்.. சீன கொரோனா தடுப்பூசி போட்டு 2 நாள்தான் ஆச்சு.. இம்ரான் கான் நிலைமையை பார்த்தீங்களா!

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: சீன நாட்டு கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட 2 நாட்களில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இது அந்த நாட்டு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது பாகிஸ்தான். இதுவரை 615,810 கோவிட் -19 கேஸ்கள் அங்கு பதிவாகியுள்ளன.

உண்மையிலேயே இன்னும் அதிகப்படியான மக்கள் அந்த நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பாக். பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனா தொற்று உறுதியானது- வீட்டில் தனிமை படுத்தி கொண்டார்!பாக். பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனா தொற்று உறுதியானது- வீட்டில் தனிமை படுத்தி கொண்டார்!

பாகிஸ்தானுக்கு நன்கொடை

பாகிஸ்தானுக்கு நன்கொடை

இந்த நிலையில், சீனா பிப்ரவரி 1ம் தேதி 500,000 டோஸ், சினோபார்ம் கொரோனா தடுப்பூசியை பாகிஸ்தானுக்கு நன்கொடையாக அளித்தது. இதனால் பிப்ரவரி 2ம் தேதி முதல், முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை பாகிஸ்தான் ஆரம்பித்துள்ளது.

முதியோருக்கு முதலில் தடுப்பூசி

முதியோருக்கு முதலில் தடுப்பூசி

முதலில் வயதானவர்களிடமிருந்து தொடங்கி மார்ச் 10ம் தேதி முதல் பொதுமக்களுக்கு கோவிட் -19 தடுப்பூசிகளை அறிமுகப்படுத்தியது. பிப்ரவரி தொடக்கத்தில் சுகாதார ஊழியர்கள் டோஸ்களை பெறத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

2 நாட்கள்தான்

2 நாட்கள்தான்

இந்த நிலையில்தான் 2 நாட்கள் முன்பு பிரதமர் இம்ரான் கானுக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆனால், இன்று இம்ரான் கானுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தேசிய சுகாதார சேவைகள், ஒழுங்குமுறைகள் மற்றும் ஒருங்கிணைப்பு தொடர்பான பிரதமரின் சிறப்பு உதவியாளராக இருக்கும் பைசல் சுல்தான் இதை உறுதிப்படுத்தினார்.

உறுதி செய்த ட்வீட்

சீன தடுப்பூசி சினோபார்மின் முதல் டோஸ் மார்ச் 18ம் தேதி இம்ரான் கானுக்கு செலுத்தப்பட்டது. இந்த நிலையில்தான், பைசல் சுல்தான் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், இம்ரான் கான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்தலில் உள்ளார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனத் தடுப்பூசி பலன் இல்லை

சீனத் தடுப்பூசி பலன் இல்லை

சீனா நன்கொடையாக 5 லட்சம் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை பாகிஸ்தானுக்கு நேற்று வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சீன தடுப்பூசியின் செயலாக்கம் அவ்வளவு சிறப்பாக இல்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். பிரேசில் நாட்டு புள்ளி விவரம் அடிப்படையில் பார்த்தால், 50 சதவீதம் அளவுக்குத்தான் சீனத் தடுப்பூசியால் பலன் கிடைக்கிறதாம்.

இம்ரான் கான் நிலைமை

இம்ரான் கான் நிலைமை

இருந்தாலும் தடுப்பூசி போட்ட 28 நாட்கள் கழித்து ஒரு டோஸ் போட வேண்டியது அவசியம். இதன்பிறகும், 4 வாரங்களுக்குள்ளாகத்தான் படிப்படியாக கொரோனா எதிர்ப்பு சக்தி உருவாகும். ஆனால் இம்ரானுக்கு 2 நாட்களில் கொரோனா உறுதியாகியுள்ளதால், சீனத் தடுப்பூசி பலனளிக்கவில்லை என்று பொத்தாம் பொதுவாக கூறி விட முடியாது. ஆனால் இம்ரான் கான் 2 வாரம் முன்கூட்டியே தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

பாகிஸ்தானில் தடுப்பூசிகள்

பாகிஸ்தானில் தடுப்பூசிகள்

சினோபார்ம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா தவிர, அவசரகால பயன்பாட்டிற்காக ரஷ்யாவின் ஸ்பூட்னிக் மற்றும் சீனாவின் கன்சினோ பயோலாஜிக்ஸ் இன்க் (கன்சினோபோ) தடுப்பூசிகளுக்கு பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Two days after taking the Chinese COVID-19 vaccine, Pakistan Prime Minister Imran Khan has tested positive for the virus. This was confirmed by the Faisal Sultan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X