For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் ஆண்மை நீக்கம்.. சட்டத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் ஒப்புதல்

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை அளிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஆண்மை நீக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் பாலியல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக போக்ஸோ சட்டமும் கொண்டுவரப்பட்டுள்ளது.

Pakistan Prime Minister Imran Khan Approves Chemical Castration Of Rapists: Report

தற்போது இதேபோல் பாகிஸ்தானும் பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை அளிக்க முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு ஆண்மை நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமித்ஷா வந்தும் தீராத பிரச்சனை.. குண்டை தூக்கி போட்ட எல்.முருகன்.. குழப்பத்தில் அதிமுகவினர்..!அமித்ஷா வந்தும் தீராத பிரச்சனை.. குண்டை தூக்கி போட்ட எல்.முருகன்.. குழப்பத்தில் அதிமுகவினர்..!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோருக்கு இரசாயண முறையில் ஆண்மை நீக்கம் செயவதற்கும் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைவாகக் கண்காணிப்பதற்கும் கொண்டுவரப்பட்ட சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் சட்ட அமைச்சகம் பலாத்காரத்திற்கான திருத்தங்களுடன் கூடிய வரைவை முன்வைத்தது என்றும் ஜியோ டிவி செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.

English summary
Pakistan Prime Minister Imran Khan on Tuesday approved in principle a law on chemical castration of rapists and fast tracking of sexual assault cases, a media report said on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X