தயிர் வாங்கணும்.. நடுவழியில் ரயிலை நிறுத்திய டிரைவர்.. வைரல் வீடியோவால் வேலை காலி!
வீடியோ வைரலானதைத் தொடர்ந்து தயிர் வாங்க ரயிலை நிறுத்திய ஓட்டுநரை சஸ்பெண்ட் செய்துள்ளது பாகிஸ்தான்.
இஸ்லாமாபாத்: தயிர் வாங்குவதற்காக பொறுப்பில்லாமல் ரயிலை நடுவழியில் நிறுத்திச் சென்ற ஓட்டுநரின் மீது உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது பாகிஸ்தான் அரசு.
சமூகவலைதளப் பக்கங்கள் நேரத்தைக் குடிப்பவை, தேவையில்லாதவை எனப் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், பல நேரங்களில் சமூகத்தில் நடக்கும் அநீதிகளை படம் பிடித்து உலகம் முழுவதும் பரப்பும் பொறுப்பான வேலையையும் அவை செய்யத் தவறுவதில்லை.
அப்படித்தான் பயணிகளின் உயிரைப் பற்றி சற்றும் கவலைப்படாமல், தயிர் வாங்குவதற்காக ரயிலை பாதி வழியில் நிறுத்திச் சென்ற ஓட்டுநரின் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் சமீபத்தில் வைரலானது.

பதறிய பயணிகள்
சம்பந்தப்பட்ட ரயிலானது பாகிஸ்தானின் கிழக்கு நகரான லாகூரில் இருந்து தெற்கே கராச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. ரயிலை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் நடுவழியில் திடீரென ரயிலை நிறுத்தியுள்ளார். என்ன காரணத்திற்காக இப்படி ரயில் நடு வழியில் நிறுத்தப்பட்டுள்ளது என பதறிப் போய் அதில் இருந்த பயணிகள் வெளியில் எட்டிப் பார்த்துள்ளனர்.

தயிர் வாங்கிய டிரைவர்
அப்போது ரயிலை ஓட்டிச் சென்ற நபர், ஹாயாக ரயிலில் இருந்து இறங்கிச் சென்று அருகில் இருந்த கடையில் தயிரை வாங்கியுள்ளார். ஏதோ தனது இருசக்கர வாகனத்தை இயக்குவது போல், பின்னர் மீண்டும் ரயிலில் ஏறி அங்கிருந்து அதனை ஓடச் செய்துள்ளார். இந்தக் காட்சிகளைக் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

வைரலான வீடியோ
இந்த சம்பவத்தை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு செய்ய, அது வைரலாகி விட்டது. இந்த வீடியோ அந்நாட்டு ரயில்வே அமைச்சர் அசாம்கானின் பார்வைக்கும் சென்றது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், "நாட்டின் சொத்துக்களை தனிப்பட்ட பயன்பாட்டிற்கு பயன்படுத்த எவரையும் அனுமதிப்பதில்லை. இதற்கு முன் இப்படியொரு நிகழ்வு நடந்ததில்லை. இனி எதிர் காலத்தில் இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வோம்" என்று தெரிவித்திருந்தார்.

வேலை காலி
அதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட ரயில் ஓட்டுநரை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது அந்நாட்டு அரசு. சமூகவலைதளங்களில் இந்த வீடியோவைப் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், சம்பந்தப்பட்ட ரயில் ஓட்டுநரை கலாய்த்து கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். இதில் மற்றொரு காமெடி என்னவென்றால், சம்பந்தப்பட்ட ஓட்டுநர் தயிர் வாங்க ரயிலை நிறுத்தி உதவியாக, அன்றைய தினம் பணியில் இருந்த உதவி ரயில் ஓட்டுநரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதுதான்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications