For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி வழியில் பாகிஸ்தான்..? 5000 ரூபாய் நோட்டுக்கு தடை விதிக்க மேலவையில் தீர்மானம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மேலவையில் அந்த நாட்டில் புழக்கத்தில் உள்ள 5000 ரூபாய் நோட்டுக்கு தடை விதிக்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான தீர்மானத்தை பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி எம்.பி. உஸ்மான் சயீப் உலாக் கான் கொண்டு வந்தார். பாகிஸ்தான் மேலவையில் எதிர்க்கட்சிதான் பெரும்பான்மையாக உள்ளதால், இந்த தீர்மானம் நிறைவேறியுள்ளது. ஆனால் அந்த நாட்டு அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Pakistan senate passes resolution to withdraw Rs 5000 note

பாகிஸ்தான் சட்ட அமைச்சர் ஜாகித் ஹமீத் பேசுகையில், இந்த முயற்சி பொருளாதாரத்தில் பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும், குழப்பத்தை ஏற்படுத்தும். இந்தியாவிலும் இதே நிலையே இப்போது தொடர்கிறது. பாகிஸ்தானில் மொத்தம் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் 30 சதவிதம் ரூ. 5 ஆயிரம் ரூபாய் நோட்டுகளே. இந்நோட்டுகளை திரும்ப பெற்றால் மக்கள் மத்தியில் ரூபாய் மீதான நம்பிக்கையானது சீர்குலைந்துவிடும் என்றார் அவர்.

பாகிஸ்தான் மக்கள் கட்சி உறுப்பினர்கள் பேசுகையில், நாட்டில் சட்டவிரோத பரிவர்த்தனை அனைத்தும் 5000 ரூபாய் நோட்டுகள் மூலமாகவே நடைபெறுகிறது என்பதால் தடை அவசியம். 3 முதல் 5 ஆண்டுகாலத்திற்குள் படிப்படியாக இந்த தடை கொண்டுவரப்பட வேண்டும் என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது நல்ல விஷயம் என்றனர்.

English summary
Pakistan's Senate Monday passed a resolution seeking withdrawal of high denomination Rs 5,000 currency notes "in a phased manner".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X