இந்தியா எப்ப வேணாலும் ராணுவ நடவடிக்கையை எடுக்கலாம்.. பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் பீதி
இஸ்லாமாபாத்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து, இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளால் பீதியில் பாகிஸ்தான் உறைந்து கிடக்கிறது. இத்தகைய சூழலில் இந்தியா நாடு முழுக்க போர் ஒத்திகை நடத்த உத்தரவிட்டு இருக்கும் நிலையில், எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இந்தியா எப்போது வேண்டுமானாலும் ராணுவ தாக்குதல் நடத்தலாம் என்று பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே இதுபோல அவர் கூறியிருந்த நிலையில், மீண்டும் பேசியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரியாக விளங்கும் இந்த இடத்தில் கடந்த மாதம் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய வெறியாட்டம் இந்தியாவையே உலுக்கியது. அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தியாவின் நடவடிக்கைகள்
இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பயங்கரவாதிகளுக்கு கனவில் கூட நினைக்காத அளவுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி எச்சரித்து இருந்தார். பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்ட நினைத்த இந்தியா, அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற உத்தரவு, வணிகத்தடை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில், பாகிஸ்தானும் சிம்லா ஒப்பந்தத்தை மீறுவோம் என்றும், இந்திய கப்பல்கள் பாகிஸ்தான் துறைமுகத்துக்குள் நுழைய தடை என்றும் அடாவடி அறிவிப்புகளை வெளியிட்டது. அதே நேரம் இந்திய எல்லைக்கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச்சூடுகளை நடத்த தொடங்கினர்.
போர் ஒத்திகை நடத்த உத்தரவு
அவர்களுக்கு இந்திய ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்தியாவின் அதிரடி நடவடிக்கையால் அரண்டு கிடக்கும் பாகிஸ்தான், ஆத்திரமூட்டும் வகையில், எதையவாது பேசி வருகிறது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில், நாடு முழுக்க போர் ஒத்திகை நடத்தவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் மிரண்டுள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் காவ்ஜா ஆசிப், இந்தியா எப்போது வேண்டுமானாலும் ராணுவ தாக்குதலை தொடுக்கலாம் என்று தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக காவ்ஜா கூறுகையில், "எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதலை தொடுக்கலாம் என்று தகவல்கள் வருகின்றன. இந்தியாவுக்கு தகுந்த பதிலடியை கொடுப்போம்" என்றார்.
திமிராக பதில்
மேலும் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியது தொடர்பாக ஆசிபிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த காவ்ஜா ஆசிப், "சர்வதேச விசாரணை நடத்தினால் இந்தியாவே இதை செய்ததா அல்லது வேறு ஏதேனும் உள்நாட்டு குழுக்கள் செய்ததா என்பது வெளிப்பட்டு விடும். இந்தியாவின் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களுக்கு ஒரு தெளிவு கிடைத்து விடும்" என திமிராக பதிலளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications