“பையை மறப்பாங்க.. பையனை மறப்பாங்களா”.. சவுதி விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பெண் பயணி!
ஜெட்டா: குழந்தையை விமான நிலையத்தில் மறந்து விட்டுச் சென்ற பெண் பயணியால், விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த சம்பவம் சவுதியில் நடந்துள்ளது.
பயணங்கள் மேற்கொள்ளும் போது, சமயங்களில் நமது பைகளை மறந்து செல்வது பயணிகளிடையே சகஜமானது தான். ஆனால், குழந்தையையே தாய் மறந்துவிட்டு விமானத்தில் ஏறிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள கிங் அப்துல் அஜீஜ் விமானநிலையத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றது. அங்கிருந்து கோலாலம்பூர் புறப்பட்ட விமானத்தில் இருந்த பெண் பயணி ஒருவர், விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், 'என் குழந்தை என் குழந்தை' என கத்தியுள்ளார்.

பெண் பயணி:
இதனால் அதிர்ச்சி அடைந்த விமான ஊழியர்கள் அப்பெண்ணிடம் விசாரித்துள்ளனர். அப்போது தன்னுடைய குழந்தையை விமான நிலையத்திலேயே மறந்து விட்டுவிட்டு வந்து விட்டதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.

தாய்-சேய் மகிழ்ச்சி:
உடனடியாக இது தொடர்பாக விமான நிலையத்திற்கு தெரிவித்தார் விமானி. பின்னர் விமானம் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது. பதற்றமான சூழலுக்குப் பின் குழந்தை, தாயுடன் சேர்ந்தது. இதனால் சம்பந்தப்பட்ட அந்தத் தாய் மட்டுமல்ல, விமானத்தில் பயணம் செய்த மற்ற பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வைரல் வீடியோ:
இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில், விமானி, விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் பேசுகிறார். "கடவுள் நம் பக்கம் இருக்கிறார்... நாங்கள் திரும்பி வர முடியுமா என்ன? பயணி ஒருவர் அவர் குழந்தையை மறந்து விட்டுவிட்டு வந்து விட்டார்" என்று விமானி கேட்கிறார். அதற்கு, "உடனே திரும்புங்கள், இது எங்களுக்கு புதிதான ஒன்று" என்று ஆச்சரியமடைந்த கட்டுப்பாட்டு அறை அதிகாரி பதிலளிகிறார்.

இது புதுசால்ல இருக்கு:
விமானம் வானில் எழும்பிய பிறகு தொழில்நுட்ப காரணங்கள் அல்லது பயணியின் ஆரோக்கிய கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப் பட்டது என்ற செய்தியை நாம் அடிக்கடி ஊடகத்தில் பார்த்திருப்போம். ஆனால், தாயே குழந்தையை மறந்து விட்டுச் சென்றதாக் இப்படி ஒரு செய்தியை இப்போது தான் கேள்விப் படுவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications