காற்று மாசுக்கு இது தான் ஒரே தீர்வு.. சூப்பர் கருவியை கண்டுபிடித்த.. டெல்லி இளைஞரை பாராட்டிய பிரதமர்

Subscribe to Oneindia Tamil

கிளாஸ்கோ: விவசாய கழிவுகளும் அதனால் ஏற்படும் காற்று மாசும் இந்தியாவுக்கு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், இதைத் தடுக்கும் வகையில் புதிய கருவியைக் கண்டுபிடித்த வித்யுத் மோகனால் என்பவரைப் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.

இன்றைய தினத்தில் உலகின் பல்வேறு நாடுகளிலும் முக்கிய பிரச்சினையாக உள்ளது சுற்றுச்சூழல் சீர்கேடுதான். குறிப்பாகக் காற்று மாசு காரணமாக உலகின் பல நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் காற்று மாசு உச்சத்தில் உள்ளது. காற்று மாசை தடுக்க உலகின் பல்வேறு நாடுகளும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

மோடியுடன் சந்திப்பு

மோடியுடன் சந்திப்பு

இந்நிலையில், பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு தற்போது ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளப் பிரதமர் மோடி கடந்த வாரம் ஸ்காட்லாந்து சென்றிருந்தார், அப்போது காற்று மாசை எளிதாகக் குறைக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்த வித்யுத் மோகனால் என்பவரைப் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். வித்யுத் மோகனாலின் இந்த இயந்திரம் காற்று மாசை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கை ஆற்றக்கூடும்.

யார் இந்த வித்யுத் மோகனால்

யார் இந்த வித்யுத் மோகனால்

39 வயதான வித்யுத் மோகனால் டெல்லியைச் சேர்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியர் ஆவர், டெல்லியில் உள்ள காற்றின் தரம் எப்படி உள்ளது என அனைவருக்கும் தெரியும். இதனால் மோகன் அடிக்கடி நோய்வாய்ப்பட்டார். டெல்லியில் ஏற்படும் காற்று மாசுக்கு ஒரு முக்கிய காரணம் அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் விவசாய கழிவுகள் இதனால் சுத்தமான காற்றை உருவாக்க என்ன தான் தீர்பு எனச் சிந்தித்த அவர், அதற்கான செயல்களிலும் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார்.

என்ன கண்டுபிடித்தார்

என்ன கண்டுபிடித்தார்

பல தீவிர முயற்சிக்குப் பிறகு, டன் கணக்கில் விவசாயக் கழிவுகளைப் புதுப்பிக்கத்தக்க எரிபொருளாகவும் உரமாகவும் மாற்றக்கூடிய சிறிய அளவிலான டிராக்டரில் ஏற்றக்கூடிய கருவியை அவர் கண்டறிந்தார். இந்த இயந்திரம் வைக்கோல், தேங்காய் மட்டைகளைப் புதுப்பிக்கத்தக்க எரிபொருளாக மாற்றக்கூடியது. காபி ரோஸ்டர் இயங்கும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த இயந்திரம் இயங்குகிறது. இதன் மூலம் விவசாய கழிவுகளை உரங்களும் கூட மாற்ற முடியும். இந்த இயந்திரம் உத்தரகண்டில் பல்வேறு பகுதிகளில் சோதனை முறையில் பயன்படுத்தப்படுகிறது. கார்பன் உமிழ்வை இது 98% வரை குறைப்பதால் காற்றின் தரத்தை மேம்படும்.

அரசு ஒத்துழைப்பு தேவை

அரசு ஒத்துழைப்பு தேவை

இதற்காக Takachar.com என்ற நிறுவனத்தையும் அவர் நிறுவியுள்ளார். பிரதமர் மோடியுடனான தனது சந்திப்புக்குப் பின்னர், தனது கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என அவர் நம்புகிறார். இது குறித்து அவர் கூறுகையில், "பிரதமர் மோடியுடனான எனது சந்திப்பு இரண்டு நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. அதற்குள் அவர் எனது இயந்திரம் குறித்தும் அது விவசாயிகளுக்கு எந்தளவுக்கு நன்மை தரும் என்பது குறித்தும் கேட்டறிந்தார். இதை அனைவருக்கும் எவ்வளவு விரைவாக முடியுமா அவ்வளவு விரைவாக எடுத்துச் செல்வது எனது நோக்கம். அதை என்னால் தனியாகச் செய்ய முடியாது. அரசின் உதவி நிச்சயம் தேவை, அதேபோல தனியார் பங்களிப்பும் இதில் எங்களுக்கு முக்கியமானது" என்றும் அவர் குறிப்பிட்டார்.

விவசாய கழிவுகள்

விவசாய கழிவுகள்

ஆண்டுதோறும் சுமார் 120 பில்லியன் டாலர் மதிப்புடைய விவசாய கழிவுகள் உற்பத்தியாகிறது. அப்படி இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் விவசாய கழிவுகள் பெரும்பாலும் எரிக்கப்படுகிறது. இப்படி விவசாய கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் காற்று மாசில் மட்டும் ஆண்டுதோறும் 70 லட்சம் பேர் கொல்லப்படுகின்றனர். இதுபோன்ற உயிரிழப்புகளைத் தடுப்பதில் வித்யுத் மோகனாலின் இந்த கண்டுபிடிப்பு முக்கியத்தாதாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+