"போட்டி வேண்டாம்.." திட்டவட்டமாக பிரதமர் மோடி சொன்ன வார்த்தை.. கவனித்து கேட்ட உலக தலைவர்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவுக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதில் மத்திய அரசின் 'ஆக்ட் ஈஸ்ட்' (Act East) கொள்கை புதிய உத்வேகத்தை அளித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலகளாவிய சூழலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், நாடுகளுக்கு இடையே போட்டியை விட ஒத்துழைப்பே அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெறும் 23வது ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சென்றுள்ளார். உலகின் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். அதில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா மற்றும் இதர ஆசியா நாடுகளுக்கு இடையிலான உறவு என்பது வர்த்தகம், பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விரிவடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

Modi at ASEAN Summit Modi ASEAN

பிரதமர் மோடி

இது குறித்து பிரதமர் மோடி மேலும் பேசுகையில், "கடந்த சில ஆண்டுகளாக இந்தியா Act East பாலிசியை பின்பற்றி வருகிறது. இது இந்தியா மற்றும் ஆசிய நாடுகளுக்கு இடையேயான உறவுக்கு புதிய வேகத்தையும் பிணைப்பையும் கொடுத்துள்ளது. கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை தாண்டி டிஜிட்டல் தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் விண்வெளி உள்ளிட்ட புதிய துறைகளுக்கும் இந்த பார்டனர்ஷிப் விரிவடைந்துள்ளது.

2014 முதல் பல்வேறு ஆசிய நாடுகள் உடன் மேம்பட்ட உறவை உருவாக்கியுள்ளோம். மக்களிடையேயான உறவை வலுப்படுத்த 100க்கும் மேற்பட்ட முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். சுமார் 250 திட்டங்களை தொடங்கியுள்ளோம். திறன் மேம்பாட்டுக்காக 10,000க்கும் மேற்பட்ட கல்வி உதவித்தொகைகளையும் வழங்கியுள்ளோம். இந்தியாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் மற்றும் அதிகரித்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நமது நெருக்கமான உறவுக்கு சான்றாக உள்ளது" என்றார்.

போட்டி வேண்டாம்

தொடர்ந்து உலக நாடுகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்துப் பேசிய பிரதமர் மோடி, "கடந்த சில ஆண்டுகளாக உலகம் தொடர்ச்சியாக பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இன்றைய உலகிற்கு மிகவும் அவசியமானவை அமைதி, நிலைத்தன்மை மற்றும் கணிக்கக்கூடிய சூழல் ஆகியவைதான்.

இந்தியா மற்றும் ஆசியான் நாடுகள் இணைந்து உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கை கொண்டுள்ளன. எனவே, நமது எதிர்காலம் போட்டியால் தீர்மானிக்கப்படுவதாக இருக்கக்கூடாது. மாறாக ஒத்துழைப்பால் உருவாக வேண்டும். அதை நாம் உறுதி செய்ய வேண்டும்.. நாம் ஒன்றிணைந்து இந்த பிராந்தியத்தை அமைதி மற்றும் நிலைத்தன்மையின் அடையாளமாக மாற்ற முடியும். நமக்கு போட்டி தேவையில்லை, ஒத்துழைப்புதான் தேவை" என்று தெரிவித்தார்.

வளர்ந்த பாரதம்

இந்தியாவின் வளர்ச்சியும் ஆசியான் நாடுகளின் செழிப்பும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்று பிரதமர் குறிப்பிட்டார். மேலும், ஆசியான் அமைப்பின் 2045ம் ஆண்டுக்கான தொலைநோக்குத் திட்டமும், இந்தியாவின் 2047ம் ஆண்டுக்கான வளர்ந்த பாரதம் இலக்கும் பொதுவான எதிர்கால இலக்குகளை அடைவதில் முக்கிய பங்காற்றும் என்றார்.

எதிர்காலம்

கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா- ஆசியான் பார்டனர்ஷிப் புதிய உத்வேகம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இனிவரும் காலங்களில் பிராந்தியத்தின் எதிர்காலத்தை இரு தரப்பினரும் இணைந்து தீர்மானிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்தியா எப்போதும் ஆசியான் நாடுகளின் ஒற்றுமைக்கும், பிராந்திய உறவுகளில் அந்த அமைப்பின் முக்கியத்துவத்திற்கும் ஆதரவாக இருக்கும் என்றும் உறுதியளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+