Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

PM Modi Israel Visit: மோடியால் அதிர்ந்த இஸ்ரேல் நாடாளுமன்றம்.. நெதன்யாகுவின் எம்பிக்கள் செய்த பெரிய சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

டெல்அவிவ்: 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இஸ்ரேல் (PM Modi Israel Visit) சென்றார். பிரதமர் மோடியை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது மனைவி சாராவுடன் விமான நிலையம் சென்று வரவேற்றார். அதன்பிறகு பிரதமர் மோடி இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்ற சென்றார். அப்போது இஸ்ரேல் எம்பிக்கள் எழுந்து நின்று கைத்தட்டி வரவேற்றதோடு, மோடி.. மோடி என கோஷமிட்டது கவனம் பெற்றுள்ளது.

பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இஸ்ரேல் புறப்பட்டு சென்றுள்ளார். இஸ்ரேலும், நம் நாட்டுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. அதுமட்டுமின்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு - பிரதமர் மோடி இடையே நல்ல நட்பு இருந்து வருகிறது.

PM Modi Israel Visit

இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தனி விமானத்தில் இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் நகருக்கு சென்றார். விமானத்தில் இருந்து இறங்கிய பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது.

ஜோடியாக வரவேற்ற நெதன்யாகு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா நெதன்யாகு ஆகியோர் வரவேற்றனர். விமானத்தில் இருந்து மோடி இறங்கியதும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு புன்னகையுடன், மோடியை வரவேற்றார். இருவரும் ஒருவரையொருவர் கட்டி அணைத்துக்கொண்டு புன்னகை தழும்ப பரஸ்பரம் நலம் விசாரித்து கைக்குலுக்கியபடி பேசினர்.

இந்தியில் வரவேற்ற சபாநாயகர்

அதன்பிறகு பிரதமர் மோடியும், நெதன்யாகுவும் இருநாடுகள் இடையேயான உறவு பற்றி விவாதித்தனர். இதையடுத்து பிரதமர் மோடி, இஸ்ரேல் நாட்டின் நாடாளுமன்றத்துக்கு சென்றார். அவரை பிரதமர் நெதன்யாகு, சபாநாயகர் அமீர் ஓஹானா அழைத்து சென்றார்.

அப்போது சபாநாயகர் அமீர் ஓஹானா "ஜெருசலேமிற்கு உங்களை வரவேற்கிறோம், கெனெசெட்டிற்கு உங்களை வரவேற்கிறோம்'' என இந்தியில் கூறினார். நாடாளுமன்றம் சென்ற பிரதமர் மோடிக்கு அந்த நாட்டு எம்பிக்கள் எழுந்து நின்று கைகளை தட்டி உற்சாகமாக வரவேற்றனர்.

"மோடி, மோடி" முழக்கம்

மேலும் இஸ்ரேல் எம்பிக்கள். "மோடி, மோடி" என்று உற்சாக முழக்கமிட்டு பிரதமரை வரவேற்றனர். சபாநாயகர் அமீர் ஓஹானாவுடன், பிரதமர் மேடையில் அமர்ந்தார். இதையடுத்து பெஞ்சமின் நெதன்யாகு இருநாடுகளின் உறவு பற்றியும், பிரதமர் மோடி பற்றியும் புகழ்ந்து பேசினார். இதுதொடர்பாக பெஞ்சமின் நெதன்யாகு பேசியதாவது;

மோடியின் கட்டியணைப்பு

"பிரதமர் மோடியின் தனிப்பட்ட அணைப்பு(hug) தனித்துவமானது. மோடி ஹக் என உலகளவில் அறியப்படும் இது வெறும் 'ஹக்' கிடையாது. ஓர் உண்மையான உணர்வு. இது நம் தனிப்பட்ட நட்புறவை மட்டுமின்றி இரு நாட்டு மக்களிடையேயான அன்பான பிணைப்பையும் பிரதிபலிக்கிறது. தந்திரமாக பேசுவதாக நீங்கள் (பிரதமர் மோடி) நினைக்க வேண்டாம். உண்மையில் உங்களின் வருகையால் நான் இதுவரை உணராத நெகிழ்ச்சியை அடைந்துள்ளேன்.

மோடி இஸ்ரேலின் சிறந்த நண்பராகவும், இந்திய-இஸ்ரேல் கூட்டணியின் மாபெரும் பாதுகாவலராகவும் இருக்கிறார். அதோடு உலக அரங்கில் ஒரு சிறந்த தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். அவரை ஜெருசலேமிற்கு வரவேற்கிறேன்'' என்றார்.

நெதன்யாகுவின் பேச்சை தொடர்ந்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார். இதுவரை அங்கு நம் நாட்டின் தலைவர்கள் யாரும் அங்கு உரை நிகழ்த்தியது இல்லை. இதனால் இஸ்ரேல் நாடாளுமன்றமான கெனெசெட்டில் உரையாற்றிய முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+