ஜி20 நாடுகள் மாநாடு- இத்தாலி சென்றடைந்தார் பிரதமர் மோடி- முதல் முறையாக போப் ஆண்டவரை சந்திக்கிறார்!
டெல்லி: ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று இத்தாலி தலைநகர் ரோம் நகர் சென்றடைந்தார். வாடிகன் நகரில் போப் ஆண்டவரான (போப்பாண்டவர்) போப் பிரான்சிசை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். போப் ஆண்டவருடனான பிரதமர் மோடியின் முதல் சந்திப்பு என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.
ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரோம் நகரில் நாளையும் நாளை மறுநாளும் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு இத்தாலி பிரதமர் மரியோ டிரகி அழைப்பு விடுத்திருந்தார்.
ஜி 20 கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்கின்றனர். இம்மாநாட்டில் கொரோனா கால பாதிப்புகள், கொரோனா லாக்டவுன்களால் பாதிக்கப்பட்ட சர்வதேச நாடுகளின் பொருளாதார மீட்சி, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. இம்மாநாட்டில் பங்கேற்க இத்தாலி தலைநகர் ரோம் சென்றடைந்துள்ளார் பிரதமர் மோடி.

இத்தாலி- இந்திய வர்த்தக உறவு
இந்த மாநாடு நிகழ்ச்சிகளின் போது இத்தாலி பிரதமர் மரியா டிரோகி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். பிரதமர் மோடியின் இத்தாலி பயணம் குறித்து அந்நாட்டுக்கான இந்திய தூதர் நீனா மல்கோத்ரா கூறுகையில், ஜி 20 உச்சி மாநாட்டை முன்னிட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்கள், வர்த்தகத்துறை அமைச்சர்கள் ஏற்கனவே சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர். இத்தாலி- இந்தியா இடையேயான இருதரப்பு வர்த்தக உறவு 36% அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு காலத்திலும் இந்தியாவில் இத்தாலி நிறுவனங்களின் முதலீடுகள் அதிகரித்துள்ளன. இந்தியாவில் தற்போது 700 இத்தாலி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன இத்தாலியில் 100க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் செயல்படுகின்றன என்றார்.

போப் ஆண்டவருடன் முதல் சந்திப்பு
மேலும் வாடிகனுக்கு சென்று போப் பிரான்சிசை சந்திக்கவும் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். போப் பிரான்சிசுடனான சந்திப்பு 30 நிமிடம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிகனில் போப் பிரான்சிசை பிரதமர் மோடி முதல் முறையாக சந்தித்து பேசுவது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.

கிளாஸ்கோ மாநாடு
ஜி 20 மாநாடு நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் கிளாஸ்கோவில் நடைபெறும் பருவ நிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் (COP26 climate summit) பிரதமர் மோடி பங்கேற்கிறார். இம்மாநாடு நவம்பர் 1, 2 ஆகிய நாட்கள் நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பருவநிலை மாநாடு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

போரிஸ் ஜான்சனுடன் சந்திப்பு
இம்மாநாட்டு நிகழ்ச்சிகளின் போது இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். இச்சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள் குறித்து இருநாட்டு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications