For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவின் அன்பளிப்பான ‘டொரானா கேட்’... லிட்டில் இந்தியா பகுதியில் மோடி திறந்து வைத்தார்

Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: மலேசியாவின் லிட்டில் இந்தியா பகுதியில், இந்தியாவின் அன்பளிப்பான டொரானா கேட்டை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

பிரதமர் மோடி அரசு முறை பயணமாக மலேசியா சென்றுள்ளார். அங்கு லிட்டில் இந்தியா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள டொரானா கேட்டை அவர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மலேசிய பிரதமர் நஜீப் ரஜக்கும் கலந்துகொண்டார்

இந்த டொரானா கேட்டானது 7 கோடியே 30 லட்ச ரூபாய் செலவில் இந்தியாவால் கட்டித் தரப்பட்டது ஆகும்.

டொரானா கேட்டை திறந்து வைத்த மோடி, பின்னர் விழா மேடையில் பேசுகையில், ‘இந்தியா - மலேசியா நாடுகளுக்கிடையேயான நட்புறவு மிகவேகமாக வளர்ந்து வருகிறது. இந்திய - மலேசிய மக்களின் பாரம்பரியத்தி்ன் இணைப்பாக இந்த டொரானா கேட் அமைந்துள்ளது' என்றார்.

அதனைத் தொடர்ந்து மலேசிய பிரதமர் நஜீப் பேசுகையில், ‘இந்த டொரானா கேட்டானது இந்தியாவின் அன்புப் பரிசு. இருநாட்டு மக்களுக்கும் இடையேயான பிணைப்பிற்கும், நட்பிற்கும் இது ஒரு அடையாளம். இந்திய- மலேசிய வரலாற்றில் இது ஒரு முக்கிய நிகழ்வு ஆகும்' எனத் தெரிவித்தார்.

English summary
Prime Minister Narendra Modi along with his Malaysian counterpart Najib Razak today jointly inaugurated the over USD 1.1 million 'Torana Gate' built by India and said it was not merely a piece of art on stone but connecting of two nations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X