அமெரிக்கா எதிர்ப்பில் இந்தியா சேராதாம்.. சிக்னல் கொடுத்த மோடி - எக்ஸ்பர்ட் சொன்னதை கவனிச்சீங்களா
பெய்ஜிங்: 50 சதவீத வரி விதிப்பால் அமெரிக்கா - இந்தியா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் நம் நாடு சீனாவுடன் கைகோர்த்துள்ளது. பிரதமர் மோடி சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்று அந்த நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். இருப்பினும் கூட அமெரிக்கா எதிர்ப்பில் சீனா அணியில் இந்தியா சேராது. இதற்கான சிக்னலை பிரதமர் மோடி கொடுத்துள்ளதாக எக்ஸ்பர்ட் ஒருவர் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50 சதவீத வரியை நம் நாட்டுக்கு விதித்தார். இதனால் இருநாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் பொருட்களின் ஏற்றுமதி பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நம் நாடு சீனாவுடன் கைகோர்த்துள்ளது.

சீனாவுக்கும், நமக்கும் இடையே எல்லை பிரச்சனை உள்ளது. இருப்பினும் பகையை மறந்து டிரம்பின் வரி விதிப்பால் நம் நாடும், சீனாவும் சேர்ந்து செயல்பட தொடங்கி உள்ளது. இதற்கு முன்னோட்டமாக சீனாவின் தியான்ஜின் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் தனித்தனியாக சந்தித்தார். மேலும் உச்சி மாநாட்டில் 3 பேரும் ஒன்றாக சேர்ந்து போஸ் கொடுத்தனர். இது டிரம்பால் ஏற்க முடியவில்லை. அதன்பிறகு டொனால்ட் டிரம்ப், ‛‛நான் எப்போதும் மோடியுடன் நண்பராக இருப்பேன். அவர் ஒரு சிறந்த பிரதமர். ஆனால் இந்த குறிப்பிட்ட தருணத்தில் அவர் செய்தது எனக்கு பிடிக்கவில்லை.
ஆனால் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே மிகவும் சிறப்பு வாய்ந்த உறவு உள்ளது. இதுபற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. எப்போதாவது தான் இதுபோன்ற தருணங்கள் வருகின்றன. நான் எப்போதும் மோடியுடன் நன்றாக பழகி வருகிறேன். சில மாதங்களுக்கு முன்பு கூட அவர் இங்கு வந்து சென்றார்'' என்றார்.
இதற்கு பிரதமர் மோடி , ‛‛நம்முடைய உறவுகள் குறித்த அதிபர் டிரம்பின் உணர்வுகள் மற்றும் நேர்மறையான மதிப்பீட்டை பாராட்டுகிறேன. இதனை முழுமையாக பகிர்ந்து கொள்கிறேன். இந்தியாவும், அமெரிக்காவும் மிகவும் நேர்மறையான மற்றும் எதிர்கால நோக்கத்துடன் கூடிய விரிவான நல்லுறவை கொண்டுள்ளது'' என்றார். இதனால் மீண்டும் இந்தியா, அமெரிக்கா இடையேயான பிரச்சனை முடிந்து இருநாடகளும் இணக்கமாக செயல்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் தான் அமெரிக்கா - ரஷ்யாவின் உறவுகளை உன்னிப்பாக கவனித்து வரும் சீனாவின் கோர்டன் சாங்க் (Gordon Chang) எனும் எக்ஸ்பர்ட் முக்கிய விஷயத்தை கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு 50 சதவீத வரியை விதித்ததால் இருநாடுகள் இடையேயான உறவில் பிரச்சனை ஏற்பட்டது. ஆனால் தற்போது டிரம்ப், லேசாக பின்வாங்கி வருகிறார் என நினைக்கிறேன். சீனாவிடம், இந்தியாவை இழக்க விரும்பவில்லை என்று அவர் நினைக்கிறார்
.
அதேபோல் சீனா தலைமையிலான மேற்கத்திய நாடுகளின் குழுவில் மோடியும் இணைய விரும்பவில்லை. சீனா, ரஷ்யா, வடகொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பில் உறுதியாக உள்ளன. ஆனால் அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இருக்க விரும்பவில்லை. இதில் மோடி கவனமாக செயல்பட்டு வருகிறார்'' என்றார்.
கோர்டான் சாங்க்கின் இந்த கருத்துக்கு பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது பிரதமர் மோடி சீனாவின் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் மட்டுமே பங்கேற்றார். அதன்பிறகு நாடு திரும்பினார். ஆனால் ரஷ்யா, வடகொரியா, ஈரான் உள்பட பிற நாடுகளின் தலைவர்கள் மறுநாள் நடந்த 2வது உலகபோரில் ஜப்பானை, சீனா வீழ்த்திய வெற்றி விழா ராணுவ அணிவகுப்பில் பங்கேற்றனர்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உள்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். ஆனால் மோடி சீனாவின் ராணுவ அணிவகுப்பில் பங்கேற்கவில்லை. அதனை குறிப்பிட்டு தான் கோர்டன் சாங்க் இப்படி தெரிவித்துள்ளார்.
-
ஈரானுக்குள் இறங்கும் அமெரிக்க படை? டிரம்ப் கையில் பெரிய பிளான்.. நீண்டகாலம் சண்டை நடக்க வாய்ப்பு -
"பட்டாம்பூச்சி எஃபெக்ட்.." ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள் -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
இந்தியாவின் நிலைமை மோசமாக போகுது! டிரம்ப் பார்த்த வேலையால் வந்த வினை! இப்படியா சிக்கல் வரனும்! -
இந்திய கப்பல்களில் வந்த 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஆனால் இது பத்தாது! ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட் -
தொங்கு சந்தையான பங்கு சந்தை.. 1200000000000 ரூபாய் பாழாப் போச்சு! மண்ணை அள்ளிப் போட்ட ஈரான் போர்! -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. திகைப்பில் நின்ற சீனா! கத்தார் போருக்கு நடுவே இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர்












Click it and Unblock the Notifications