இந்தியாவை பாருங்க.. வங்கதேசத்தை விட்டு விளாசிய தென்கொரியா.. முகமது யூனுஸ் ஆட்சிக்கு வார்னிங்
டாக்கா: நம் நாட்டுடன் வங்கதேசம் தொடர்ந்து மோதி வருகிறது. இந்நிலையில் தான் இந்தியா, வியட்நாமை விட வங்கதேசத்தின் நிலைமை மோசமாக உள்ளது. இதனை சரிசெய்ய வேண்டும். இல்லாவிட்டால் நிலைமை மோசமாகும் என்று வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து தென்கொரியா தூதர் முழங்கி இருப்பது இடைக்கால அரசை வழிநடத்தும் முகமது யூனுஸ்க்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்த பிறகு அந்த நாடு பெரும் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது. தற்போது அங்கு இடைக்கால அரசு நடந்த வருகிறது. வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் உள்ளார்.

ஷேக் ஹசீனா ஆட்சி கலைய அங்கு இடஒதுக்கீட்டுக்கு எதிராக நடந்த போராட்டம் தான் காரணம். அதன்பிறகே ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தார். ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த நம் நாட்டில் தஞ்சமடைந்தார்.
இது நடந்து 6 மாதங்கள் ஆகும் நிலையில் இன்னும் வங்கதேசத்தின் நிலைமை மோசமாக தான் உள்ளது. சிறுபான்மையினர் மீதான தாக்குதல் உட்பட சட்டம் - ஒழுங்கு இன்னும் சரியாகவில்லை. பொருளாதார வளர்ச்சி சரிந்து வருகிறது. உள்நாட்டு உற்பத்தி குறைந்து வருகிறது. வங்கதேசத்தில் பல
தொழில்கள் முடங்கி உள்ளது. ஆனால் இவை எல்லாவற்றையும் பற்றி முகமது யூனுஸ் கவலைப்படவில்லை. நம் நாட்டை எதிர்ப்பதிலேயே தான் குறியாக உள்ளார். பாகிஸ்தானுடன் கைகோர்த்து நம் நாட்டை சீண்டும் வகையில் கருத்துகளை கூறி வருவதோடு, நம் நாட்டுக்கும், வங்கதேசத்துக்கும் இடையேயான எல்லையில் பதற்றத்தை உருவாக்கி வருகிறார்.
இந்நிலையில் தான் வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் ‛வங்கதேசத்துக்கான வெளிநாட்டு கரஸ்பாண்டன்ட் அசோசியேஷன்' சார்பில் ‛Meet the OCAB' என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பல்வேறு நாடுகளின் வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் தென்கொரியாவுக்கான வங்கதேச தூதர் பார்க் யங்க் சிக் பங்கேற்றார். அவர் பேசும்போது வங்கதேசத்துக்கு வார்னிங் மெசேஜை கொடுத்தார். இதுதொடர்பாக பார்க் யங்க் சிக் பேசியதாவது:
வங்கதேசத்தில் தற்போது இடைக்கால அரசு நடந்து வருகிறது. தொழிலதிபர்களுடன் நான் பேசும்போதெல்லாம் அவர்கள் தொழில் முதலீடுகளை நிறுத்தி வைக்கின்றனர். தயக்கம் காட்டுகின்றனர். நாட்டின் நிலைமை எப்போது மாறும் என்று அதனை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இதனால் வங்கதேசத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் நிலையற்ற தன்மை என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. அரசியல் பிரச்சனைகளை கடந்து இதனை கட்டாயமாக சரிசெய்ய வேண்டும்.
நீங்கள் டேட்டாவை பார்த்தால் தெரியும். தனியார் தொழில் முதலீடுகள் என்பது மெதுவாக வளர்ந்து வருகிறது. இது வங்கதேசத்தின் பொருளாதார வளர்ச்சியில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது மெதுவாக உள்ளது. அந்நிய நேரடி முதலீடு மற்றும் வங்கதேசத்தின் உள்நாட்டு உற்பத்தி என்பது அண்டை நாடுகளான இந்தியா, வியட்நாமை விட குறைவாக உள்ளது.
வங்கதேசம் சார்பில் வழங்கப்படும் இன்செட்டிவ் என்பது போதுமானதாக இல்லை. விசா நடைமுறை, கஸ்டமர் கிளியரன்ஸ், ரேஷனல் டேக்ஸ், வரி கொள்கை உள்ளிட்டவற்றை எளிமைப்படுத்த வேண்டும்'' என்று கூறியுள்ளார். இதன்மூலம் வங்கதேசத்தில் தொழில் முதலீடு செய்ய முடியாத நிலையை அவர் எடுத்துரைத்துள்ளார்.
வங்கதேசத்தை பொறுத்தவரை மாணவர்கள் போராட்டம், வன்முறை, ஷேக் ஹசீனா ராஜினாமா உள்ளிட்ட காரணங்களால் பொருளாதார வளர்ச்சி சரிந்துள்ளது. பிசினஸ்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. குறிப்பாக வங்கதேச பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் ஜவுளி நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி உள்ளன. இடைக்கால அரசும் அதனை கண்டுக்கொள்ளாமல் பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக எந்த நடவடிக்கைகளும் ஏற்படுத்தப்படவில்லை. அதனை சுட்டிக்காட்டி தான் வங்கதேசத்தில் முதலீடு செய்ய முடியாத நிலை உள்ளது. இந்த நிலையை உடனடியாக மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் நாட்டின் நிலைமை மோசமாகும் என்று வங்கதேசத்துக்கு வார்னிங் செய்துள்ளார் தென்கொரியாவுக்கான வங்கதேச தூதர் பார்க் யங்க் சிக்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications