For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உக்ரைன் நாட்டு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய ரஷ்ய ஆதரவு புரட்சிப் படைகள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

மாஸ்கோ: ரஷ்ய ஆதரவு புரட்சிப் படைகள் உக்ரைன் நாட்டு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

உக்ரைன் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள ஸ்லோவியான்ஸ்க் நகரிலுள்ள அரசு கட்டிடங்களை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். அவர்கள் மீது தாக்குதல் நடத்த உக்ரைனும் ராணுவத்தை குவித்துள்ளது. ஸ்லோவியான்ஸ்க் நகரின் மீது பறந்து வந்த உக்ரைன் நாட்டு ஹெலிகாப்டரை கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

இதை உக்ரைன் நாட்டு வாவதுகாப்பு அமைச்சகமும் உறுதி செய்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் கிளர்ச்சியாளர்களால் சு்டடு வீழ்த்தப்பட்டந ான்காவது ஹெலிகாப்டர் இதுவாகும். நவீன 'மிஷின் கன்'னால் சுடப்ப்டட இந்த ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து ஆறு ஒன்றில் விழுந்தது. ஆனால் அதன் பைலட் பத்திரமாக மீட்கப்பட்டார்.

சண்டை நடைபெறும் பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமி டயானா செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறுகையில்; கிளர்ச்சியாளர்கள் வாகனங்கள் மீது உக்ரைன் நாட்டு ராணுவ பீரங்கிகள் தாக்குதல் நடத்தியை நான் பார்த்தேன். பெட்ரோல் பங்க் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த எரிபொருள் எடுத்துச் செல்லும் லாரி ஒன்று அப்போது வெடித்து சிதறியது. எனது தந்தையின் தலையில் கண்ணாடி துண்டுகள் புகுந்து காயமடைந்துள்ளார். நாங்கள் எங்கு செனஅறு உயிர்பிழைக்க முடியும் என்று தெரியவில்லை என்றார்.

ரஷிய - உக்ரைன் ஆதரவாளர்களிடையே நிகழ்ந்த மோதலில் பலர் உயிரிழந்த ஒடெஸ்ஸா நகரிலிருந்து, வன்முறை பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட 67 கிளர்ச்சியாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, ஒடெஸ்ஸா காவல் நிலையம் மீது வன்முறை கும்பல் ஒன்று ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

English summary
Pro-Russian rebels shot down a Ukrainian helicopter in fierce fighting near the eastern town of Slovyansk yesterday, as Kiev drafted police special forces to the south-western port city of Odessa to halt a feared westward spread of rebellion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X