பிரதமர் மோடிக்கு நாட்டின் உயரிய விருதை அளித்து கவுரப்படுத்திய ரஷ்யா.. புதின் என்ன செய்தார் பாருங்க
மாஸ்கோ: ரஷ்யாவின் உயரிய சிவிலியன் விருது என அழைக்கப்படும் ஆர்டர் ஆப் செயிண்ட் ஆன்ட்ரூ தி அப்போஸ்தலர் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. ரஷ்யா- இந்தியா இடையேயான உறவை மேம்படுத்த மோடியின் அளப்பறிய பங்களிப்பிற்காக வழங்கப்பட்டது. இந்த விருதினை மோடிக்கு புதின் அணிவித்து கவுரவித்தார்.
இந்தியா - ரஷ்யா இடையே நீண்ட காலமாக நல்லுறவு உள்ளது. நெருங்கிய நட்பு நாடாக திகழும் இந்தியா - ரஷ்யா இடையே வருடம் தோறும் உச்சி மாநாடு நடைபெறுகிறது. அந்த வகையில், இந்தியா - ரஷ்யா இடையேயான 22-வது உச்சி மாநாடு மாஸ்கோவில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று ரஷ்யா புறப்பட்டு சென்றார். ரஷ்யாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாஸ்கோ விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ரஷ்யாவின் துணை பிரதமர் டெனிஸ் மன்டுரோவ் வரவேற்றார். அதன்பிறகு பிரதமர் மோடிக்கு ராணு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினரும் இந்திய தேசிய கொடியுடன் வந்து மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் ரஷ்ய அதிபர் மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு புதின் விருந்து அளித்தார்.
அதிபர் மாளிகையையும் பேட்டரி காரில் வலம் வந்து இரு தலைவர்களும் சுற்றி பார்த்தனர். பின்னர் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதின் - பிரதமர் மோடி இடையேயான அதிகாரப்பூர்வ சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது பரஸ்பர நலன்கள் குறித்து பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசித்தனர்.
இதனைத் தொடர்ந்து ரஷ்யாவின் உயரிய சிவிலியன் விருது என அழைக்கப்படும் ஆர்டர் ஆப் செயிண்ட் ஆன்ட்ரூ தி அப்போஸ்தலர் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. ரஷ்யா- இந்தியா இடையேயான உறவை மேம்படுத்த மோடியின் அளப்பறிய பங்களிப்பிற்காக வழங்கப்பட்டது.
விருதை பிரதமர் மோடியின் கழுத்தில் அணிவித்து, புதின் கவுரவப்படுத்தினார். அப்போது மோடியின் கழுத்தில் செயின் போல இருந்த விருது மாலை சில இடங்களில் மாறி கிடந்தது. அதை புதின், சரி செய்து விட்டார். ரஷ்ய அதிபர் புதினின் இந்த செயல் இரு தலைவர்களுக்கும் இடையே உள்ள நட்புறவு மற்றும் பிணைப்பை காட்டும் விதமாக இருந்தது.
மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியா - ரஷ்யா உறவு வலுப்பெற்றுள்ளது என்று புதின் கூறினார். ரஷ்ய நாட்டின் உயரிய விருதை பெற்றிருப்பது 140 கோடி மக்களுக்கு பெருமை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications