Russia- Ukraine crisis: நாங்கள் நிச்சயமாக போர் புரிய விரும்பவில்லை.. அதிபர் புதின்
மாஸ்கோ: உக்ரைன் மீது போர் தொடுக்கும் எண்ணம் இல்லை என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார். மேலும் பேச்சுவார்தைக்கு தான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சோவியத் நாடுகளில் ஒன்றான உக்ரைன் நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் இணைய முயற்சித்து வருகிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தரும் நிலையில் ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
உக்ரைன் எல்லையில் ரஷ்யா லட்சக்கணக்கான படைகளை திரட்டியுள்ளதால் அங்கு போர் புரியும் பதற்றம் நீடித்து வந்தது. உக்ரைன் மீது போர் புரிந்தால் கடும் விலையை கொடுக்க வேண்டி வரும் என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

எதிர்ப்பு
அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தன. மேலும் எல்லையில் படைகளை குவித்து பதற்றத்தை ஏற்படுத்தி வருவது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து விளக்கமளிக்க உக்ரைன், ரஷ்யாவுக்கு 48 மணி நேரம் கெடு விதித்திருந்தது.

போர் விமானங்கள்
போர் விமானங்கள், ராணுவ டாங்கிகள் உள்ளிட்டவைகள் நிறுத்தப்பட்டிருந்த சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்தன. இதனால் இன்றைய தினம் ரஷ்யா , உக்ரைன் மீது போர் தொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக உக்ரைன் எல்லையிலிருந்து ரஷ்ய படைகள் நேற்றைய தினம் திடீரென விலக்கப்பட்டது.

பங்கு சந்தைகள்
பங்குச் சந்தைகள் எல்லாம் சரிந்து, கச்சா எண்ணெய் தங்கம் விலை உயர்ந்தது. உக்ரைனில் உள்ள தங்கள் நாட்டினரை பிற நாட்டினர் தாயகம் திரும்புமாறு அழைப்பு விடுத்திருந்தனர். இந்த நிலையில் உக்ரைன் எல்லையிலிருந்து சில படைகளை வாபஸ் பெற்றோம் என ரஷ்யா உறுதிப்படுத்தியது.

போர் தொடுக்கும் எண்ணம் இல்லை
இதுகுறித்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் கூறுகையில் ரஷ்யா நிச்சயமாக போரை விரும்பவில்லை. ஏவுகணைகள நிலை நிறுத்துவதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் ராணுவ வெளிப்படைத்தன்மை குறித்து அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக இருப்பதாக புதின் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications