For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிம்மதியா கக்கூஸ் போக முடியுதா?.. "அந்த இடத்தில்" லபக்னு கடித்த பாம்பு.. அடுத்து நடந்த ட்விஸ்ட்!

Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: மலேசியாவில் பாத்ரூமில் இயற்கை உபாதை கழித்துக் கொண்டே செல்போனில் கேம் விளையாடிய நபரின் புட்டத்தை பிடித்து மலைப் பாம்பு ஒன்று கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு காலத்தில் மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் பாத்ரூம் போகும் போது கையுடன் நாளிதழ்களை கொண்டு செல்வார்கள். முக்கி திடக்கழிவை வெளியே தள்ளும் நேரத்தில் பேப்பரை படித்து விடலாம் என்ற ஒரு எண்ணம்தான்.

ஆனால் இன்றைய நவீன காலத்தில் விரல் நுனியில் எல்லாம் கிடைக்கிறது .அதாவது ஸ்மார்ட் போனில் கிடைக்காத விஷயங்களே இல்லை எனலாம். ஸ்மார்ட் போனே "யப்பா என்னை ஆளவிடுங்க" என சொல்லும் வரை நம்மாட்கள் போனை விடுவதே இல்லை.

12 அடி நீளம்.. 20 கிலோ எடை.. வீட்டுக்கு வந்த மலைப்பாம்பு.... செய்த காரியம்.. அதிர்ந்த வெங்கடேஷ்! 12 அடி நீளம்.. 20 கிலோ எடை.. வீட்டுக்கு வந்த மலைப்பாம்பு.... செய்த காரியம்.. அதிர்ந்த வெங்கடேஷ்!

பாத்ரூம்

பாத்ரூம்

சரி பாத்ரூம் போகும்போதாவது சும்மா விடுறாங்களா அதுவும் இல்லை. சார்ஜ் காலியாகிவிட்டாலும் பவர் பேங்கில் இணைத்தாவது இயற்கை உபாதையை கழிக்க போகிறார்கள். போய்விட்டு போனை பார்த்துக் கொண்டிருந்தால் மலம் கழிப்பது தாமதமாகிறது. இதனால் மற்ற உறுப்பினர்கள் கதவை தட்டும் நிலை ஏற்படும்.

சிகரெட்

சிகரெட்

சிகரெட் பிடித்தால்தான் கக்கா வரும் என்ற காலம் போய் போனை கொண்டு சென்றால்தான் மலம் கழிக்க முடியும் எனும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படித்தான் மலேசியாவை சேர்ந்த டசாலி எனும் இளைஞர் பாத்ரூம் செல்லும் போது போனை கொண்டு சென்றார். அவர் அந்த போனில் கேம் விளையாடி கொண்டிருந்தார்.

புட்டத்தை கடித்த ஜந்து

புட்டத்தை கடித்த ஜந்து

அப்போது அவரது புட்டத்தை ஏதோ கடித்தது போல் இருந்தது. உடனே அதிர்ச்சி அடைந்த அவர் மலம் கழிப்பதை விட்டுவிட்டு என்னாச்சு என பார்க்கும் போது ஏதோ ஒரு ஜந்து அவரை நன்றாக கடித்து கொண்டிருந்தது. உடனே தனது பின்பக்கத்தை வேகமாக இழுத்தார். இதையடுத்து அவர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துவிட்டு, தனது பின்பக்கம் எப்படியிருக்கிறது என்பதை அறிய மருத்துவமனைக்கு சென்றார்.

வேகமாக இழுத்த இளைஞர்

வேகமாக இழுத்த இளைஞர்

கடித்தது மலைப்பாம்பு என்பதால் விஷத்தன்மை ஏதும் இல்லை. எனினும் அந்த பாம்பு கடித்ததால் காயத்திற்கு மருந்து போடப்பட்டது. எனினும் அந்த பாம்பின் வாயிலிருந்து தனது பின்பக்கத்தை வேகமாக இழுத்ததால் பாம்பின் பாதி பல் டசாலியின் பேக் பகுதியில் சிக்கிக் கொண்டது. இதை மருத்துவமனை ஊழியர்கள் எடுத்தனர்.

40 ஆண்டுகளில் இதுதான் முதல்முறை

40 ஆண்டுகளில் இதுதான் முதல்முறை

இதுகுறித்து டசாலி கூறுகையில் நாங்கள் 40 ஆண்டுகளாக இந்த பகுதியில் வசித்து வருகிறோம். இது வரை இது போன்ற ஒரு அனுபவம் நடந்ததில்லை. இதுதான் முதல்முறை. குடியிருப்பு பகுதிக்குள் பாம்பு வருவது. இந்த பாம்பு கடியின் அதிர்ச்சியிலிருந்து மீளாத 28 வயது டசாலி, இரு வாரங்களுக்கு தனது வீட்டு கழிப்பறையை பயன்படுத்தாமல் உள்ளூரில் மசூதியில் உள்ள கழிப்பறையை பயன்படுத்தியதாக தெரிவித்தார். பாம்பு கடித்ததில் டசாலிக்கு எதுவும் ஆகவில்லை, ஆனால் பாம்பின் பல்தான் உடைந்துவிட்டது பாவம் (!).

English summary
Python snake bites man's butt in toilet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X