For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திடீர்னு காணாமல் போன ஜப்பானின் “ஹிட்டோமி” செயற்கைகோள்- உடைஞ்சு போச்சா?

Google Oneindia Tamil News

டோக்கியோ: ஜப்பானில் இருந்து விண்ணில் ஏவப்பட்டிருந்த செயற்கைகோள் ஒன்று மாயமாய் மறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் பெரும் பொருட் செலவில் தயாரிக்கபட்ட ஹிட்டோமி என்ற செயற்கைக்கோள் ஒன்று விண்ணில் ஏவப்பட்டது.

கருந்துளைமற்றும் விண்வெளி மர்மங்களை ஆராய்வதற்காக கடந்த மாதம் உயரிய தொழில்நுட்பத்துடன் இந்த செயற்கைக்கோள் ஏவபட்டது.

என்ன ஆச்சோ?:

என்ன ஆச்சோ?:

இந்த செயற்கைக்கோளிடமிருந்து வந்துகொண்டிருந்த தகவல்கள் திடீர் என நின்று போனது. செயற்கை கோள் என்ன ஆனது என தெரியவில்லை.

உடைந்த பாகங்கள் கிடைத்ததா?:

உடைந்த பாகங்கள் கிடைத்ததா?:

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அமெரிக்க கூட்டு விண்வெளி செயல்பாட்டு மையம் ஜப்பானின் செயற்கைகோளின் 5 உடைந்த பாகங்களை கண்டறிந்ததாக கூறியது

ஆராய்ச்சியில் ஏஜென்சி:

ஆராய்ச்சியில் ஏஜென்சி:

உடைந்த செயற்கைக்கோள் பாகங்களை ஆராய்ந்துவரும் அமெரிக்க ஏஜென்சி அளித்திருக்கும் தகவல்களை தற்போது ஆய்வுசெய்துவருவதாக ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் ஏஜென்சி தெரிவித்திருக்கிறது.

4 நாடுகளின் கூட்டு முயற்சி:

4 நாடுகளின் கூட்டு முயற்சி:

கருந்துளையிலிருந்தும் பிரபஞ்ச வெளியிலிருந்தும் வெளியாகும் எக்ஸ் ரே கதிர்களை ஆராய்வதற்கான இந்தத் திட்டத்தில் அமெரிக்கா, ஐரோப்பா, கனடா ஆகியவற்றின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகள் இணைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Scientists and engineers in Japan are scrambling to save a satellite and more than a quarter of a billion dollars of investment tumbling out of control in space.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X