கர்நாடகா: 2 நாட்கள் ஓய்வுக்கு பின் ராகுல் காந்தி பாதயாத்திரை தொடக்கம்- சோனியா காந்தியும் பங்கேற்பு!
மாண்டியா: கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் இருந்து இன்று தமது பாதயாத்திரையை மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடங்கினார். ராகுலின் இன்றைய நடைபயணத்தில் அவரது தாயாரும் காங்கிரஸ் இடைக்கால தலைவருமான சோனியா காந்தி இணைந்து கொண்டார்.

2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை இலக்காக வைத்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் கடந்த 7-ந் தேதி ராகுல் காந்தியின் பாதயாத்திரையை திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் பாதயாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தி பின்னர் கேரளாவில் பயணம் மேற்கொண்டார். கேரளாவில் மொத்தம் 19 நாட்கள் ராகுல், நடைபயணம் மேற்கொண்டார். கேரளாவில் ராகுல் காந்தியின் பயணத்துக்கு மிகப் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. இதன்பின்னர் நேற்று மீண்டும் தமிழகத்தின் கூடலூரில் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார்.

இன்று காலை முதல் கர்நாடகாவில் ராகுல் பயணத்தை தொடங்கி உள்ளார். கர்நாடகாவில் மொத்தம் 21 நாட்கள் ராகுல் நடைபயணம் மேற்கொள்கிறார். கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் தொடங்கிய இந்த நடைபயணம் மைசூரு, மாண்டியா, ராய்ச்சூர் வழியாக தெலுங்கானா செல்கிறது.

இந்நிலையில் தசரா கொண்டாட்டங்களுக்காக ராகுல் தமது பயணத்தில் 2 நாட்கள் ஓய்வு எடுத்திருந்தார். கடந்த 2 நாட்கள் ஓய்வுக்குப் பின்னர் இன்று காலை மாண்டியா மாவட்டத்தில் இருந்து தமது பாதயாத்திரையை ராகுல் காந்தி மீண்டும் தொடங்கி உள்ளார். இன்றைய பாதயாத்திரையின் போது சோனியா காந்தியும் இணைந்து கொண்டார்.

-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications