காதலியால் முடிந்த கதை! அமெரிக்காவை அலற வைத்த எல் மென்சோ! உலக போதை பொருள் தலைவராக உருவெடுத்தது எப்படி
மெக்சிகோ சிட்டி: நியூ ஜெனரேஷன் கார்டலின் (CJNG) தலைவரானார் எல் மென்சோவை மெக்சிகோ ராணுவம் கொன்றது. லத்தீன் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா முழுவதும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட எல் மென்சோ வளர்ந்தது எப்படி.. அவரது உயிர் போகக் காரணமாக இருந்த அந்த ஒரு மேட்டர் என்ன என்பது குறித்தும் நாம் பார்க்கலாம்!
சமீப காலங்களில் இவ்வளவு வேகமாகவும் இவ்வளவு கொடூரமாகவும் எந்தவொரு போதைப் பொருள் தலைவரும் வளரவில்லை. அந்தளவுக்கு வேகமாக வளர்ந்தவர் தான் எல் மென்சோ. மெக்ஸிகோ மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இவரை உலகின் மிகச் சக்திவாய்ந்த போதைப் பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராக விவரித்தனர். கண்டங்கள் தாண்டிய கிரிமினல் நெட்வொர்க் கொண்ட இவரின் தலைக்கு $15 மில்லியன் வெகுமதி அறிவிக்கப்பட்டு இருந்தது..

எல் மென்சோ
எல் மென்சோ மெக்ஸிகோவின் மிகோகன் மாநிலத்தில் எல் நரஞ்சோ என்ற விவசாயச் சமூகத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே அமெரிக்காவிற்குப் புலம் பெயர்ந்த அவர், தனது உறவினர் அபிஜெல் கோன்சலஸ் வாலென்சியா என்பவர் நடத்தி வந்த 'குயினிஸ்' கேங்கில் இணைந்தார். அப்போதே போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டார். ஒரு முறை ஹெராயின் கடத்தல் குற்றங்களுக்காகக் கைதான அவர் மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்தார். அதன் பிறகு மெக்ஸிகோவிற்கு நாடு கடத்தப்பட்டார்.
மெக்சிகோ திரும்பியதும், அவர் கிரிமினல் கேங்கில் சேர்ந்தார். அப்போது தான் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மிலேனியோ கார்டலுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. அந்தக் குழு பிளவுபட்ட போது, நியூ ஜெனரேஷன் கார்டலின் (CJNG) தலைவரானார் எல் மென்சோ. 2009இல் இவர் தொடங்கிய இந்த குழு, மிக குறுகிய காலத்தில் மெக்ஸிகோவின் ஆதிக்கம் செலுத்தும் குற்றச் சாம்ராஜ்யங்களில் ஒன்றாக வளர்ந்தது.
உலக அளவில் நெட்வொர்க்
எல் மென்சோவின் தலைமையிலான CJNG கேங்கிற்கு வன்முறை தான் பிரதான ஆயுதம். இவர்கள் மெத்தம்ஃபெடமைன், கோகைன், ஹெராயின் மற்றும் ஃபெண்டானில் போன்ற போதைப்பொருட்களை அமெரிக்காவிற்குப் பெரிய அளவில் கடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். லத்தீன் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா முழுவதும் இதன் ஆபரேஷன்கள் பரவியிருந்தன.
இப்படி தான் 20 ஆண்டுகளுக்குள் எல் மென்சோ பல ஆயிரம் பேரைக் கொண்ட வலிமையான கேங்க்கை உருவாக்கினார். இவரது கேங் இது மெக்ஸிகோவில் உள்ள 32 மாகாணங்களில் 21ல் செயல்படுகிறது.
வன்முறை
வன்முறையே இவர்கள் பிரதான ஆயுதமாக இருந்துள்ளது. கவச வாகனங்கள், கனரக ஆயுதங்கள் மற்றும் ராணுவ ஸ்டைல் தாக்குதல்கள் எனத் திட்டம் போட்டு ஒவ்வொன்றையும் செய்துள்ளனர். இதன் காரணமாகவே மெக்சிகோவில் மிகவும் ஆபத்தான கார்டல்களில் ஒன்றாகக் கருதினர். இதை உணர்ந்தே அமெரிக்கா மிக விரைவில் எல் மென்சோவை சர்வதேச அளவில் தேடும் நபராக அறிவித்தது. மேலும், அவருடைய சொத்துகளும் முடக்கப்பட்டது.
முன்பே குறிப்பிட்டது போல எல் மென்சோ என்றாலே வன்முறை தான். ஒரே இடத்தில் பலர் படுகொலைகளைச் செய்வது, காவல்துறை மற்றும் ராணுவத்தினர் மீதான தாக்குதல்கள் எனப் பல கொடூரங்களை அரங்கேற்றியுள்ளனர். 2015ல் அவரை கைது செய்யப்போன ராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தினர். இந்தச் சம்பவம் கார்டலின் ஆயுத பலத்தையும், அரசுடன் நேரடியாக மோதத் தயாராக இருக்கும் திமிரையும் காட்டியது. ரகசியமாகச் செயல்பட்ட பழைய கார்டல் தலைவர்களைப் போலல்லாமல், எல் மென்சோவின் கீழ் அவரது கேங் வெளிப்படையாகவே சுற்றி வந்தது.
காதலியால் சிக்கினார்
இந்தச் சூழலில் தான் மெக்சிகோ ராணுவம் அவரை காலி செய்தது. எந்தளவுக்கு வேகமாக வளர்கிறாரோ அதே அளவுக்கு வேகமாகக் காலியாகி உள்ளார். அவரது காதலியை வைத்து எல் மென்சோ இருப்பிடத்தை அறிந்த மெக்சிகா ராணுவம் அவரை கொன்றது. துப்பாக்கிச் சூட்டில் காயமான அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications