For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரிட்டனில் ஏலத்திற்கு வரும் பைபிளின் முதல் ஆங்கிலப் பதிப்பு!

Google Oneindia Tamil News

லண்டன்: பிரிட்டனில் ஆங்கில மொழியில் முதல் முதலில் வெளியான பைபிளின் முதல் பதிப்பு விரைவில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.

வில்லியம் டிண்டெல் எனும் ஆங்கிலேயர், முழுமையான பைபிளை ஆங்கிலத்தில் 1526 ஆம் ஆண்டு பதிப்பித்தார்.இதன் மற்றொரு பதிப்பு 1537 இல் அச்சானது.

அந்தப் பதிப்பின் மிக அரிய பிரதி இப்போது ஏலத்தில் விற்பனையாகவுள்ளது. அந்தப் பிரதியைத் தற்போது வைத்துள்ள நபர், கேம்ப்ரிட்ஜ் நகரிலுள்ள பழைய புத்தகங்கள் விற்பனை செய்யும் கடையில் 1967 இல் இதனை 1.25 பவுண்டுக்கு வாங்கினார்.

Rare copy of first Bible printed in English to be auctioned

விரைவில் நடைபெறவுள்ள ஏலத்தில் இந்த அரிய பைபிள் பதிப்பு கிட்டதட்ட ரூபாய் 35 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிறிஸ்தவம் குறித்து வில்லியம் டிண்டெல்லின் மாறுபட்ட கோட்பாடுகளுக்கு எழுந்த எதிர்ப்பையடுத்து, அவருக்கு 1536 இல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

பைபிளை ஆங்கிலத்தில் பதிப்பித்ததன் மூலம், எளியோரும் அதனை அறிந்து கொள்ள உதவியதுடன் ஆங்கில மொழிக்குப் பெரும் வளம் சேர்த்தவர் டிண்டெல். ஆங்கிலத்தில் மிகப் பிரசித்தி பெற்ற "கேளுங்கள் தரப்படும்", "தட்டுங்கள் திறக்கப்படும்", "கண் இமைக்கும் நேரம்" உள்ளிட்ட எண்ணற்ற சொற்றொடர்களையும் புதிய சொற்களையும் உருவாக்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A rare copy of the first Bible to be printed in English, bought by its current owner for 25 shillings (£1.25), is to be auctioned next month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X