Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆத்தி! இதெல்லாம் நம்ம ஊர்ல அமல்படுத்துனா எப்படி இருக்கும்..ஜப்பானில் உணவு விடுதி போட்ட செம கண்டிஷன்

Subscribe to Oneindia Tamil

டோக்கியோ: தற்போது மக்கள் வீட்டில் இருந்தாலும் சரி வெளியிடங்களுக்கு சென்றாலும் சரி.. எதிரில் உள்ளவர்கள் முகத்தை கூட பார்க்காமல் எப்போதும் செல்போன் பயன்படுத்திக் கொண்டே இருக்கும் போக்குதான் காணப்படுகிறது. சாப்பிடும் போது கூட சமூக வலைத்தளங்களில் வீடியோ பார்த்துக் கொண்டு சாப்பிடும் பழக்கத்தை பலரும் கொண்டுள்ளனர். இத்தகைய பழக்கம் உள்ளவர்களுக்கு கடிவாளம் போடும் வகையில் ஜப்பானில் உள்ள ஒரு உணவகம் வாடிக்கையாளர்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. அது என்ன என்று இங்கே பார்ப்போம்.

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் மக்கள் எந்த நேரமும் செல்போனும் கையுமாகத்தான் அலைவதை காண முடிகிறது.

அதிலும் ஸ்மார்ட் போன்கள் பயன்பாட்டுக்கு வந்த பிறகு உணவு இல்லாமல் கூட இருந்து விடலாம் செல்போன் இல்லாமல் இருக்க முடியாதுப்பா.. என்று மக்கள் சொல்லும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது.

செல்போன் பயன்பாடு

செல்போன் பயன்பாடு

பேருந்து, ரயில் போன்ற பயணங்களில் முன்பெல்லாம் அடித்து பிடித்து ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து வெளியில் உள்ள இயற்கை காட்சிகளை பார்த்தவாறே பேருந்தில் போடப்படும் பாடல்களை கேட்டுக்கொண்டே செல்லும் காலம் எல்லாம் ஏறத்தாழ மறைந்து விட்டதே எனலாம். ஏனெனில், தற்போதைய காலத்தில் எந்த இருக்கை கிடைத்தாலும் பயணிகள் அனைவரின் கவனமும் செல்போன் மீதுதான் இருக்கிறது.

விபத்தில் சிக்குவது

விபத்தில் சிக்குவது

அவ்வளவு ஏன்? நடந்து போனால் கூட குனிந்த தலை நிமிராமல் செல்போனை பயன்படுத்திக்கொண்டே செல்லும் பலரையும் பார்த்து இருக்கிறோம். இப்படி போகும் போது சில நேரங்களில் விபத்தில் சிக்கி அடிபட்டுக் கொள்ள வேண்டிய நிலையும் ஏற்படாமல் இல்லை. உலகமே உள்ளங்கைக்குள் அடங்கிவிட்டது என்று சொல்லும் அளவிற்கு ஸ்மார்ட் போன்களில் அத்தனை வசதிகள் இருப்பதால் நாள் முழுவதும் மக்கள் பயன்படுத்திக்கொண்டே இருக்கும் சூழல் உள்ளது.

ஜப்பான் ஓட்டலில்..

ஜப்பான் ஓட்டலில்..

காலையில் தூங்கி எழுந்ததும் முதலில் பலரது கைகளும் தற்போது செல்போனைத்தான் நாடுகிறது. அதே மாதிரி இரவு தூங்க போகும் போது கடைசியாக பார்ப்பது செல்போன் ஆகத்தான் இருக்கும். இப்படி உலக மக்கள் இன்றைய நவீன யுகத்தில் செல்போனுக்கு கிட்டத்தட்ட அடிமையாகிவிட்டார்கள் என்று சொல்லும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்... ஜப்பானில் உள்ள ஒரு உணவு விடுதி ஒன்று தங்கள் உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு புதுவிதமான கண்டிஷன்களை போட்டுள்ளது.

 ஸ்ட்ரிக்ட் கண்டிஷன்

ஸ்ட்ரிக்ட் கண்டிஷன்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள தெபு- ஷான் என்ற உணவகம், பிசியான நேரங்களின் போது வாடிக்கையாளர்கள் செல்போன் பயன்படுத்திக்கொண்டே சாப்பிடக் கூடாது என்று ஸ்ட்ரிக்ட் கண்டிஷன்களை போட்டு இருக்கிறது. ஜப்பான் உணவகத்தின் இந்த நடவடிக்கை அந்த நாட்டில் சமூக வலைத்தளங்களில் மக்கள் மத்தியில் விவாத்க்கப்படும் 'ஹாட் டாபிக்'ஆக மாறியிருக்கிறது. இந்த கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது குறித்து உணவு விடுதியின் உரிமையாளர் கூறியதாவது:-

 வீடியோக்களை பார்த்துக் கொண்டே

வீடியோக்களை பார்த்துக் கொண்டே

ஒருமுறை நாங்கள் மிகவும் பிசியாக இருந்தோம். வாடிக்கையாளர்கள் கூட்டமும் அதிகமாக இருந்தது. அப்போது ஒரு வாடிக்கையாளர் 4 நிமிடங்கள் ஆகியும் அவர் முன் இருந்த உணவை சாப்பிடாமல் செல்போன் பயன்படுத்திக் கொண்டே இருந்தார். அதன்பிறகே இப்படி ஒரு கட்டுப்பாட்டை கொண்டு வர முடிவு செய்தோம். பொதுவாகவே வாடிக்கையாளர்கள் சாப்பிட வேண்டிய நேரத்தில், தங்கள் ஸ்மார்ட் போன்களில் வீடியோக்களை பார்த்துக் கொண்டே நேரம் கடத்தி விடுகிறார்கள்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+