For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மரண பள்ளத்தாக்கில் தானாக நகரும் பாறைகள்.. ஆவிகளின் சேட்டையா, விஞ்ஞான புதிரா?

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவிலுள்ள மரண பள்ளத்தாக்கில் மிகவும் கனமான பாறைகள் கூட தானாகவே நகர்ந்து செல்வது விஞ்ஞானிகளுக்கே புரியாத புதிராக உள்ளது. ஆவிகளின் அட்டகாசமாக இருக்குோ என்ற பேச்சும் அங்கு எழுந்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மரண பள்ளத்தாக்கு என்ற ஒரு பகுதி உள்ளது. இந்த பள்ளத்தாக்கில் பாறைகள் தானாகவே அசைந்து செல்வதை முதன்முறையாக 1948ம் ஆண்டு, கண்டுபிடித்தனர். அப்போது இது மிகவும் பீதியை கிளப்பியது.

Rocks Are Moving Across Death Valley

ஏனெனில் சாதாரண கற்கள் மட்டுமின்றி, 300 கிலோ எடையுள்ள கற்களும் அநாயாசமாக அசைந்து செல்வது அங்கு சகஜம். இதனால் பேய் இதுபோல கற்களை நகர்த்துவதாக நம்பப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அமெரிக்க விஞ்ஞானிகள் அந்த பள்ளத்தாக்கில் குவிந்து ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.

சில விஞ்ஞானிகள் சிறப்பு அனுமதி பெற்று தாங்கள் கொண்டு சென்ற கற்களை பொருத்தி ஜி.பி.எஸ் மூலமாக ஆய்வு செய்தபபோது கல் நகர்ந்து செல்வதையும், அதன் தூரத்தையும் உறுதி செய்து கொண்டனர்.

இதுகுறித்து சில விஞ்ஞானிகள் கூறுகையில், "இரவு நேரத்தில் பூமிக்கு அடியில் தண்ணீர் உறைந்து பனிக்கட்டியாகவும், பகல் நேரத்தில் அதுவே உருகி தண்ணீராகவும் பெருக்கெடுக்கிறது. இதுவும் பாறை நகர்வுக்கு காரணமாக இருக்கலாம்" என்று கூறுகின்றனர்.

ஆனால் இதுவரை ஆதாரப்பூர்வமாக இந்த கருத்துக்கு விஞ்ஞானிகள் வலு சேர்க்கவில்லை. இதையடுத்து கல் நகர்வது விஞ்ஞானத்தினாலா அல்லது வேறு ஏதும் அமானுஷிய சக்தியினாலா என்ற சந்தேகத்தில் மக்கள் குழம்பிப்போயுள்ளனர்.

English summary
Rocks Are Moving Across Death Valley. The rocks move very slowly, but they do move. Scientists have been studying and tracking the movement for decades.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X