போலாந்தை தொடர்ந்து.. ருமானியாவுக்குள் நுழைந்த ரஷ்ய ட்ரோன்கள்! அலர்ட் மோடில் நேட்டோ படைகள்
மாஸ்கோ: சமீபத்தில் போலாந்துக்குள் ரஷ்ய ட்ரோன்கள் நுழைந்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இதனை தொடர்ந்து மற்றொரு நேட்டோ நாடான ருமானியாவுக்குள்ளும் ரஷ்ய ட்ரோன்கள் நுழைந்திருக்கின்றன.
ரஷ்ய ட்ரோன் ஒன்று தங்களது வான்வெளியை அத்துமீறி நுழைந்ததாக ருமேனியா தெரிவித்துள்ளது. சனிக்கிழமையன்று உக்ரைனில் நடந்த ரஷ்ய தாக்குதலை கண்காணித்து வந்த ருமேனிய போர் விமானங்கள், உக்ரைனின் தெற்கு எல்லைக்கு அருகே அந்த ட்ரோனை கண்டுபிடித்ததாக தெரிவித்திருக்கின்றன.

இந்த அத்துமீறல் தவறுதலாக நடந்தது கிடையாது என்றும், இது ரஷ்யா போர் விரிவாக்கத்தின் ஒரு பகுதி என்றும் உக்ரைனிய அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி கூறியிருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ரஷ்யா இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ருமேனிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "டான்யூப் நதியில் உக்ரைனிய உள்கட்டமைப்புகள் மீது ரஷ்ய வான்வழித் தாக்குதல்கள் நடந்த பிறகு, எங்கள் ராணுவத்தின் இரண்டு F-16 போர் விமானங்கள் இரு நாடுகளின் எல்லையை கண்காணித்தன. அப்போது ரஷ்ய ட்ரோனைக் கண்டுபிடித்திருக்கின்றன. சிலியா வெச் கிராமத்திற்கு தென்மேற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் இந்த ட்ரோன் கண்டறியப்பட்டது. பின்னர் ட்ரோன் ரேடாரில் இருந்து மறைந்துவிட்டது" என கூறியிருக்கிறது.
ரஷ்ய ட்ரோன் மக்கள் வசிக்கும் பகுதிகளின் மீது பறக்கவில்லை. எனவே உடனடி ஆபத்தை ஏற்படுத்தவில்லை. இருப்பினும் வெளிநாட்டின் ட்ரோன் ஒன்று திடீரென எல்லைக்குள் ஊடுருவுவதை ஏற்க முடியாது.
போலந்தும் சனிக்கிழமை ரஷ்ய டிரோன்கள் குறித்து எச்சரித்திருந்தது. "நாங்களும் எங்கள் நேச நாடுகளின் விமானப் படைகளும் தடுப்பு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன. எங்கள் தரைப்படைகளும் உஷார் நிலையில் இருக்கின்றன" என்று போலாந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் X தளத்தில் பதிவிட்டார். ஆனால் போலாந்தை தாக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்று ரஷ்யா தெளிவாக கூறியிருக்கிறது. ட்ரோன் அத்துமீறல் தவறுதலாக நடந்ததாகவும் விளக்கியுள்ளது.
முன்னதாக போலாந்தில் ரஷ்ய ட்ரோன்கள் போலாந்தில் தென்பட்டதையடுத்து, நேட்டோ படைகள் திடீரென பயிற்சியில் இறங்கியிருக்கின்றன. டென்மார்க், பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் தங்கள் படைகளை ஒருங்கிணைக்க தொடங்கியிருக்கின்றன. மேலும் பல நாடுகள் இதில் சேரும் என சொல்லப்படுகிறது. நேட்டோவில் மொத்தம் 32 நாடுகள் உறுப்பினராக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications