அம்பானி வீட்டு கல்யாணத்தையே மிஞ்சிய ஆடம்பர திருமணம்.. மொத்த சீனாவையும் ஏங்க வைத்த பரிசுகள்
பெய்ஜிங்: அம்பானி வீட்டு கல்யாணத்தையே மிஞ்சிய ஆடம்பர திருமணம் ஒன்று சீனாவில் நடந்திருக்கிறது. திருமணத்தில் பங்கேற்ற விருந்தினர்களை விமானத்தில் அழைத்து, ஐந்து நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து ஐந்து நாட்கள் தங்க வைத்து சிறப்பாக கவனித்து, கடைசியில் ஆளுக்கு 66,000 ரூபாய் சிவப்பு பையில் பரிசு கொடுத்துள்ளார்கள்.
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயக்கப்படும் விஷயம் என்பார்கள். ஆனால் திருமணமே சொர்க்கத்தில் நடத்தால் எப்படி இருக்கும்.. திருமணத்தை காண வந்த விருந்தினர்களுக்கும் சொர்க்கத்தை காட்டியுள்ளனர் திருமண தம்பதி. தங்கள் விருந்தினர்களுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவத்தை சீன தம்பதி தந்துள்ளார்கள்

"கிரேஸி ரிச் ஏசியன்" (Crazy Rich Asians) திரைப்படத்தை பார்த்திருக்கீங்களா.. அல்லது அந்த படத்தை பற்றி கேள்வி பட்டிருக்கீங்களா.. அதில் வரும் ஆடம்பரமான திருமண காட்சிகள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஆனால் யதார்த்தம் ஒருபோதும் நடைமுறையில் சாத்தியம் இல்லை என்றே பலரும் நினைத்திருப்பார்கள்.
ஆனால் நிஜ வாழ்க்கையில் ' கிரேஸி ரிச் ஏசியன்' பாணி திருமணம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. சுற்றுலா தொடர்பான வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிடும் இன்புளுயன்சரான டானா சாங் ஒரு ஆடம்பரமான திருமணத்தின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார், அங்கு விருந்தினர்களுக்க செய்யப்பட்ட அனைத்து செலவுகள் பற்றியும் அவர் கூறியுள்ளார். அவர் வெளியிட்ட தகவல்களை பார்க்கும் போது, அம்பானி திருமணத்தை மிஞ்சும் அளவுக்கு ஆடம்பரமாக நடந்திருக்கிறது.
இதுபற்றி டானா சாங் கூறும் போது, " ' கிரேஸி ரிச் ஏசியன்' பாணி திருமணத்தை பார்க்கும் போது, நிஜ வாழ்க்கையில் பைத்தியக்காரத்தனம் நிறைந்த பணக்காரரின் திருமண இப்படித்தான் இருக்கும் என்று நானன் நினைத்துக் கொண்டேன். திருமணத்தில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு இப்படி ஒரு வரவேற்பை யாருமே கொடுத்திருக்க மாட்டார்கள்... யாருமே பார்க்காத அளவிற்கு மிகவும் பிரம்மாண்டமான வரவேற்புடன் விருந்தினர்கள் திருணமத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட சீனாவைச் சேர்ந்த அந்த திருமண தம்பதிகள் தங்கள் விருந்தினர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்திருக்கிறார்கள். அங்கு நடந்த நிகழ்வுகளை அவர்களின் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைக்க வேண்டும் என்று நினைத்து செய்திருக்கிறார்கள். திருமணத்தில் பங்கேற்க வரும் விருந்தினர்களை விமானத்தில் டிக்கெட் போட்டு, ஐந்து நாட்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்க வைத்துள்ளனர்.

சீனாவில் அந்த ஐந்து நாட்களுமே வெளியில் செல்ல ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் மற்றும் பென்ட்லி கார்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி உள்ளனர். அதே நேரத்தில் அங்கு செய்யப்பட்ட ஆடம்பரமான திருமண அலங்காரமானது ஆசியாவே ஆச்சர்யப்படும் அளவுக்கு இருந்தது. டெலிபோன் பூத் முதல் எல்லாமே மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. செய்தித்தாள்களின் மணமகன் மற்றும் மணமகளின் படங்கள் தனியாக அச்சடிக்கப்பட்டிருந்தன.
பொதவாக சீன திருமணங்களில், விருந்தினர்கள் புதுமணத் தம்பதிகளுக்கு பணம் நிரப்பப்பட்ட பாரம்பரிய "சிவப்பு பாக்ஸில்" கொண்டு வருவார்கள். அது அவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் வெற்றியும் தரும் என்று நம்புவார்கள். ஆனால் இந்த சடங்கை அந்த தம்பதியினர் அடியோடு மாற்றினர்.மாறாக விருந்தினர்களுக்கு சிவப்பு பாக்ஸில் பணம் வழங்கினர் . பதிலுக்கு பணம் எதையுமே அவர்கள் வாங்கவில்லை
திருமணப் பரிசுகளைத் தவிர, ஒவ்வொரு விருந்தினருக்கும் ஒரு சிவப்பு பாக்ஸில் $800 (தோராயமாக ₹66,000) கொடுத்தார்கள். இந்த "சிவப்பு பாக்ஸை கண்டு நான் இன்னும் ஆச்சரியப்படுகிறேன். விருந்தினர்களை ஐந்து நாட்களுக்கு பின்னர், இலவமாக விமான டிக்கெட் எடுத்து விமானத்திலேயே சொந்த ஊருக்கு அனுப்பி உள்ளனர் அந்த திருமண தம்பதி" இவ்வாறு டானா சாங் கூறினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருவதுடன், பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.












Click it and Unblock the Notifications