ஈரானின் முதல் உயர்மட்ட தலைவர் கொமோனி.. இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தெரியுமா! இப்படியொரு தொடர்பு இருக்கா

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: ஈரானைச் சுற்றிலும் இப்போது போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்த இக்கட்டான சூழலில் ஈரானை உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி வழிநடத்தி வருகிறார். ஆனால் அவருக்கு முன்பு உயர்மட்ட தலைவராக இருந்த கொமேனியை பற்றி உங்களுக்குத் தெரியுமா.. அவர் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது தெரியுமா.. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.!

மத்திய கிழக்கு நெருக்கடியில் ஈரான் சிக்கித் தவிக்கிறது. அமெரிக்காவின் அழுத்தத்திற்கும், இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல்களுக்கும் பணியப் போவதில்லை என்று ஈரான் சூளுரைத்துள்ளது. இதனால் அங்கு நாளுக்கு நாள் மோதல் அதிகரித்தே வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் ஈரானை அயதுல்லா அலி கமேனி வழிநடத்தி வருகிறார். இவர் தான் ஈரானின் உயர்மட்ட தலைவராக இருந்து வருகிறார்.

Ruhollah Musavi Khomenei s UP Village Roots India s Link to Iran s Islamic Revolution

முதல் உயர்மட்ட தலைவர்

இவருக்கு முன்பு ஈரானின் முதல் உயர்மட்ட தலைவராக இருந்தவர் ருஹொல்லா கொமேனி. இவர் தான் ஈரானை நிறுவியவர்களில் ஒருவர். இந்த ருஹொல்லா கொமேனியின் வம்சத்தினர் ஒரு காலத்தில் இந்தியாவில் வசித்தவர்கள் என்பது பலருக்கும் தெரியாது. அவர்கள் இந்தியாவில் எங்கு வசித்தார். அவர்களின் பூர்வீகம் குறித்து நாம் பார்க்கலாம்.

அயதுல்லா ருஹொல்லா முசவி கொமேனி ஈரானில் இஸ்லாமிய புரட்சிக்குத் தலைமை தாங்கினார். 1979ல் அந்நாட்டின் முதல் உயர்மட்ட தலைவர் என்ற பொறுப்பையும் அடைந்தார். அவருடைய தாத்தா சையத் அகமது முசவி 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உத்தரப் பிரதேசம் மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிண்டூர் கிராமத்தில் பிறந்தவர். அந்த காலத்தில் கிண்டூர் ஷியா அறிஞர்களின் மையமாக இருந்தது.

இந்திய வம்சாவளி

பின்னர் அவர் ஈராக்கில் உள்ள நஜாப் நகருக்குக் குடிபெயர்ந்தார். இறுதியாக 1834ல் ஈரானின் கொமெய்ன் நகரில் குடியேறினார். இங்கேதான் அவரது குடும்பத்தின் மத மற்றும் அரசியல் அதிகாரத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர். அப்போதும் கூட முசவி தனது இந்தி பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டார். இது ஈரானிய பதிவுகளிலும் உள்ளது. இது அவரது இந்திய வம்சாவளியை உறுதிப்படுத்துகிறது. பிறகு 20ம் நூற்றாண்டில் ஈரானின் அரசியல் போக்கை மாற்றியமைத்த கொமேனியின் ஆன்மீக நாட்டத்திற்கும் கூட அவரது தாத்தா முசவியே காரணம் என்று கூறப்படுகிறது.

யார் இந்த அயதுல்லா கொமேனி?

அயதுல்லா கொமேனி ஈரானின் இஸ்லாமிய புரட்சியைத் தலைமை தாங்கியவர். 1979ல் மேற்கத்தியச் சார்பு ஷா முகமது ரேசா பஹ்லவியை பதவியில் இருந்து அகற்றிவிட்டு, ஈரானில் இஸ்லாமிய குடியரசை நிறுவினார். அதன் பிறகு ஈரானின் முதல் உயர்மட்ட தலைவராகவும் ஆனார். இருப்பினும், அந்த பதவியில் அவர் 10 ஆண்டுகள் மட்டுமே இருந்தார். அவர் 1989இல் காலமானார்.

எளிமையின் உருவம்

கொமேனி ஒரு எளிய தலைவராகவே அறியப்படுகிறார்.. ஈரானின் மிக உயர்ந்த அரசியல் பதவிக்கு வந்த பின்னரும் அவர் தெஹ்ரானில் ஒரு சாதாரண ஒற்றை மாடி வீட்டில் வசித்து வந்தார். பஹ்லவியின் வீட்டிற்கு நேர் எதிராக, அவரது வீடு இன்றும் கூட எந்தவொரு ஆடம்பரமும் இல்லாமல் அப்படியே இருக்கிறது. சையத் மஹ்தி இமாம் ஜமா என்பவர் அந்த வீட்டை அவருக்கு இலவசமாக வழங்கினார்.. இருப்பினும் கொமேனி அவருக்கு ஆயிரம் ரியால்களை கொடுத்தார்.

அது நிஜமாகவே சிறிய வீடு தான். அந்த வீட்டில் மொத்தமே இரண்டே இரண்டு சிறிய அறைகள் தான் உள்ளன. அந்த வீடு அவரது எளிமையான ஆளுமையைப் பிரதிபலித்தது. தனது வீட்டை அலங்கரிக்க அரசு பணத்தைப் பணத்தைப் பயன்படுத்த அவர் மறுத்துவிட்டார். கொமேனியின் வாரிசு அலி காமேனி இப்போது ஈரானை வழிநடத்தி வருகிறார். இப்போது மோதல் அதிகரித்தாலும் கூட ஈரான் சரணடையாது என்பதை அவர் திட்டவட்டமாகக் கூறி வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+