கூலிப்படை குழுவிற்கு பயந்து.. தனது எண்ணை கிடங்கை, தானே குண்டு போட்டு அழித்த ரஷ்யா.. ஷாக் வீடியோ
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆதரவில் வளர்ந்த வாக்னர் குழு தற்போது அவரது அரசுக்கு எதிராகவே கிளம்பி உள்ளது. இதனால் ரஷ்யாவில் உள்நாட்டு மோதல் துவங்கி உள்ள நிலையில் வாக்னர் குழுவான கூலிப்படைக்கு பயந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் தனக்கு சொந்தமான எண்ணெய் கிணற்றை ரஷ்யா ராணுவம் குண்டு போட்டு அழித்து இருக்கும் ஷாக் வீடியோ வெளியாகி அங்குள்ள பதற்றத்தை காட்டுகிறது.
உக்ரைன் மீது போர் தொடுத்ததில் இருந்து ரஷ்யா பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தான் தற்போது ரஷ்யா புதிய பிரச்சனையை எதிர்கொண்டுள்ளது. அதாவது உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு உதவியாக செயல்பட்டு வந்த தனியார் ராணுவமாகவும், கூலிப்படையாகவும் செயல்பட்டு வரும் வாக்னர் குழு தற்போது ரஷ்யாவில் ராணுவத்துக்கு எதிராக கிளம்பி உள்ளது.
Russian helicopter has bombed a fuel base in Voronezh, Russia. pic.twitter.com/XWMFwneeK6
— The Spectator Index (@spectatorindex) June 24, 2023
உக்ரைன் போரின்போது வாக்னர் குழுவுக்கு ரஷ்யா ராணுவம் ஆயுதங்களை வழங்கவில்லை. வாக்னர் குழுவை சேர்ந்த வீரர்களை ரஷ்யா ராணுவம் கொன்றதாக குற்றம்சாட்டி வாக்னர் குழுவினர் அங்கு கலகத்தை தொடங்கி உள்ளனர்.
முதற்கட்டமாக வாக்னர் குழு ரஷ்யாவின் தெற்கு பகுதியான ரோஸ்டோவ் பகுதிக்குள் நுழைந்துராணுவ தலைமையகத்தை கைப்பற்றி உள்ளது. மேலும் ரோஸ்டோவை சுற்றிய பகுதிகள் உள்பட பல இடங்களுக்கு வாக்னர் குழுவினர் படையினர் பீரங்கி வண்டிகளில் அணிவகுத்து செல்கின்றனர். இதனால் தலைநகர் மாஸ்கோ உள்ளிட்ட பல இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் தற்போது ஷாக் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ரஷ்யாவின் வோரோனிஸ் பகுதியில் உள்ள எண்ணெய் கிணற்றை ரஷ்யாவின் ராணுவ ஹெலிகாப்டர் குண்டு வீசி அழித்துள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. தனக்கு சொந்தமான எண்ணெய் கிணற்றையே ரஷ்ய ராணுவம் அழித்ததன் பின்னணியில் உள்ள தகவலும் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக ரஷ்யாவின் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த எண்ணெய் கிணறு தற்போது ரஷ்யா அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனை கைப்பற்றி தங்களின் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப வாக்னர் எனும் கூலிப்படை முடிவு செய்தது. இது நடந்தால் வாக்னர் குழு வேகமாக முன்னேறும். மேலும் அது ரஷ்யாவுக்கு பிரச்சனைணை ஏற்படுத்தும்.
இதனால் தான் வாக்னர் குழுவின் செயல்பாட்டை தடுக்கும் நோக்கத்தில் எண்ணெய் கிணறு மீது ரஷ்ய ராணுவம் ஹெலிகாப்டரில் பறந்து குண்டு வீசி அழித்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் பதற்றம் என்பது அதிகரித்துள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். மேலும் வரும் நாட்களில் ரஷ்யாவின் ராணுவத்துக்கும், வாக்னர் குழுவுக்கும் இடையேயான மோதல் என்பது உச்சமடையலாம் என கூறப்படுகிறது.
இந்த வாக்னர் குழுவை தொடக்கம் முதலே அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் எதிர்த்து வந்தன. ஆனால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தொடர்ந்து ஆதரவு வழங்கி வந்தார். மேலும் ரஷ்யாவுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடும் நாடுகளை இந்த வாக்னர் குழுவினர் மூலம் அந்நாடு பழித்தீர்த்து வந்தது.

இந்நிலையில் தான் வாக்னர் எனும் கூலிப்படையினர் தற்போது விளாடிமிர் புதின் அரசின் ராணுவ தலைமையை கவிழ்ப்பதாக சூளுரைத்து மோதலை தொடங்கி உள்ளனர். இதனை விளாடிமிர் புதின் கடுமையாக கண்டித்துள்ளார். இன்று அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது நாட்டுக்கு எதிராக ஆயுதம் ஏந்துபவர்கள் துரோகிகள். வாக்னர் குழு முதுகில் குத்துகிறது. நாட்டின் பாதுகாப்புக்காக கடும் நடவடிக்கை எடுப்பேன் என புதின் முழங்கி உள்ளார்.
இந்த வாக்னர் குழுவின் தலைவராக இருக்கும் யெவ்ஜெனி பிரிகோசும், விளாடிமிர் புதினும் ஒரே நகரை சேர்ந்தவர்கள். இவர்கள் 2 பேருக்கும் 1990ம் ஆண்டில் இருந்தே பழக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் தான் விளாடிமர் புதின் மற்றும் யெவ்ஜெனி பிரிகோஸ் ஆகியோர் எதிரெதிர் துருவங்களாக நின்று மோதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications