கண்ணைக் குத்திய உக்ரைன்.. உக்கிரமான ரஷ்யா! மெயின் பாயிண்டில் அடித்த புதின்! இனி கொஞ்சம் கஷ்டம் தான்!

Subscribe to Oneindia Tamil

கீவ்: தெற்கு ரஷியாவில் உள்ள ஒரேன்பர்க் எரிவாயு ஆலையில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால் பெரும் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், உக்ரைன் மீதான் தாக்குதலை தீவிரப்படுத்த அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், உக்ரைனின் வட எல்லைப் பகுதியான செர்னிஹிவ் (Chernihiv) பிராந்தியத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ரஷ்யாவின் தாக்குதல், அங்கு உள்ள பல முக்கிய பகுதிகளின் மின்சார விநியோகம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. இதில், நிறுத்தப்பட்ட செர்னோபில் அணு மின் நிலையத்துக்கு அருகிலுள்ள ஸ்லாவுடிச்சு (Slavutych) நகரமும் அடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவின் தாக்குதல் ஒரு "எனர்ஜி தளம்" மீது நடத்தப்பட்டதாக அரசு நிறுவனங்கள் உறுதிப்படுத்தியிருந்தாலும், அதன் சரியான இருப்பிடம் குறித்து விவரங்களை வெளியிடவில்லை. யூரி ஃபோமிச்சேவ், தனது டெலிகிராம் பதிவில் நகரின் ஒரு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும், நகரின் தண்ணீர் வழங்கும் அமைப்பு மாற்று மின்சாரத்தில் செயல்படுகிறது என்றும், முக்கிய மருத்துவம் மற்றும் அவசர சேவைகள் இடங்களில் சேவைகள் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். தற்போது அவசர சேவை குழுக்கள் மின்சாரத்தை மீட்டெடுக்க தீவிரமாக பணியாற்றி வருகின்றன.

Ukraine Russia Kyiv

ரஷ்யா உக்ரைன்

கீவ் பிராந்தியத் தலைவரும், மின்சார விநியோகத்தை மீட்டெடுக்க அவசர குழுக்கள் பணியாற்றி வருவதாக உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இந்த தாக்குதல் பற்றிய தகவலை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை. இதுகுறித்து ரஷ்யா தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை. கடந்த சில வாரங்களாக, ரஷ்யா தனது ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை உக்ரைனின் மின்சார மற்றும் எரிவாயு வலையமைப்புகள் மீது மையப்படுத்தி நடத்தி வருகிறது.

செர்னிஹிவ் மின்தடை

குளிர்காலம் நெருங்கும் நிலையில், இந்த தாக்குதல்கள் உக்ரைனுக்கு கடுமையான சவாலாக மாறியுள்ளன. இம்மாத தொடக்கத்தில் நடந்த தாக்குதலின் போது, கீவ் மற்றும் பல நகரங்களில் 10 இலட்சம் மக்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் நாட்டின் அடிப்படை வசதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதோடு, ரஷ்ய தாக்குதல்கள் காரணமாக உக்ரைன் தனது முக்கிய எரிவாயு நிலையங்களில் சிலவற்றின் செயல்பாட்டை இடைநிறுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

எரிசக்தி தாக்குதல்

இந்த குளிர்காலத்தில் உக்ரைன், ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் அசர்பைஜான் ஆகிய நாடுகளிலிருந்து சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிவாயுவை இறக்குமதி செய்யும் திட்டம் கொண்டுள்ளது என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அதேவேளை, செர்னிஹிவ் பகுதி கடந்த வார இறுதியிலும் ரஷ்ய தாக்குதலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அந்த தாக்குதலால் 55,000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதேபோல், வட உக்ரைனின் பிற நகரங்களிலும் மின்சார தடைகள் பதிவாகியுள்ளன.

குளிர்கால சவால்

வடகிழக்கு கர்கிவ் (Kharkiv) மாகாணத்தின் இசியம் (Izium) நகரிலும் பல பகுதிகள் இருளில் மூழ்கியதாக அதிகாரிகள் கூறினர். இந்நிலையில், உக்ரைன் பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோ, பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து நாட்டின் மின்சார அமைப்பின் நிலைத்தன்மை குறித்து கலந்துரையாடினார். இதற்காக ஜனாதிபதி அலுவலகம், நாடாளுமன்றம் மற்றும் அரசாங்கம் இணைந்து புதிய ஒருங்கிணைப்பு குழுவை அமைத்துள்ளது.

உக்ரைன் போர்

அதேசமயம், உக்ரைனும் தன்னுடைய நீண்ட தூர தாக்குதல்களை ரஷ்யாவின் ஆற்றல் அமைப்புகள்மீது அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்திலிருந்து இதுவரை குறைந்தது 58 ரஷ்ய ஆற்றல் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதல்கள், இரு நாடுகளுக்கும் இடையேயான நீண்டகால போரின் புதிய கட்டத்தை நோக்கி நகர்த்தியுள்ளதாக சர்வதேச அரசியல் வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+