தீவிரமாக தேடப்பட்டு வந்த ரஷ்ய விமானம்.. கடலில் விழுந்து நொறுங்கியது.. 28 பயணிகள் பரிதாப பலி!
மாஸ்கோ: ரஷ்யாவில் காணாமல் போன ஏஎன் -26 விமானம் கம்சட்கா தீபகற்பம் அருகே இருக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் விழுந்து சிதறியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் பயணித்த 28 பேரும் பலியாகிவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
Recommended Video
ரஷ்யாவில் பல்வேறு தனியார் விமான போக்குவரத்து நிறுவனங்கள் பழைய மாடல் விமானங்களை பயன்படுத்தி வருகின்றன. சோவியத் காலத்தில் பயன்படுத்தப்பட்ட விமானங்கள் இப்போதும் கூட பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ரஷ்யாவின் தனியார் நிறுவனம் இயக்கிய ஆண்டனோவ் 26 என்ற பயணிகள் விமானம் இன்று காணாமல் போனது. இந்த விமானம் பல வருடமாக இயக்கப்பட்டு வந்த பழைய விமானம் ஆகும்.

காணாமல் போனது
கம்சட்கா தீபகற்பத்தில் உள்ளது பெட்ரோபாவ்லோவ்ஸ்க் என்ற பகுதியில் இருந்து பலனா என்ற ரஷ்ய கிராமத்திற்கு இந்த விமானம் சென்ற போது மாயம் ஆனது. இந்த விமானத்தில் 23 பயணிகள் உட்பட 28 பேர் இருந்தனர். பலனா கிராமத்தை நெருங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் இந்த விமானம் காணாமல் போனது.

எப்படி
ஏர் டிராபிக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து இந்த விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இரண்டு ஹெலிகாப்டர்கள் மூலம் விமானம் தீவிரமாக தேடப்பட்டு வந்தது. இந்த விமானம் பலனா பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மோதி இருக்கலாம் அல்லது கடலில் விழுந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

தேடுதல்
இந்த நிலையில், கம்சட்கா தீபகற்பத்தை ஒட்டியுள்ள கடல் பகுதியிலும், நிலக்கரி சுரங்கம் அருகிலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த தேடுதல் வேட்டையில் ஏஎன் -26 விமானம் கம்சட்கா தீபகற்பம் அருகே இருக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் விழுந்து சிதறியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் பயணித்த 28 பேரும் பலியாகிவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

விரைந்த
ரஷ்யாவில் இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. விபத்து நேர்ந்த நேரத்தில் வானிலை மோசமாக இருந்தது. விமானமும் பழையது என்பதால், விபத்து நேர்ந்து இருக்கலாம் என்று ரஷ்ய அரசு தெரிவித்து உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications