For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பார்கின்சன் அச்சம்.. அதிபர் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறாரா புடின்.. என்ன நடக்கிறது ரஷ்யாவில்?

Google Oneindia Tamil News

மாஸ்கோ: அமெரிக்க அதிபர் தேர்தல் ஒரு பக்கம் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கும் நிலையில்.. இன்னொரு பக்கம் ரஷ்யாவில் அதிபர் பதவியே காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் பதவியில் இருந்து புடின் விலக போகிறார் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று இரவுக்குள் முழு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் 264 வாக்குகளுடன் தற்போது முன்னிலை வகித்து வருகிறார்.

குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் 214 வாக்குகளுடன் தோல்வி அடையும் நிலையில் உள்ளார். இதனால் அமெரிக்காவில் அதிபர் பதவியில் மாற்றம் நடக்கும் என்கிறார்கள். இன்னொரு பக்கம் ரஷ்யாவிலும் அதிபர் பதவியில் மாற்றம் ஏற்படுவதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

ரஷ்ய அதிபர் புடின் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு.. அரசியலில் இருந்து விலக நினைக்கிறார் என்று தகவல்கள் வருகிறது. இவருக்கு நடுக்குவாதம் எனப்படும் பார்கின்சன் நோய் இருப்பதாக தகவல்கள் வருகிறது. அதாவது இவரின் மைய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, அதற்கான முதல் கட்ட அறிகுறிகள் தோன்றியுள்ளது என்றும் கூறப்படுகிறது.

அறிகுறி

அறிகுறி

கடந்த சில மாதங்களாக புடின் காலில் இருக்கும் நரம்புகள், முதுகில் இருக்கும் நரம்புகள் வேலை செய்யவில்லை. அவர் நிற்கவும், நடக்கவும் கஷ்டப்படுகிறார், என்று கூறப்படுகிறது. இவர் கலந்து கொண்ட சில பொது நிகழ்ச்சிகளில் திடீர் என்று எழுந்து நிற்க முடியாமல் இவர் சிரமப்பட்ட வீடியோக்கள் கூட இணையத்தில் வைரலானது.

என்ன நடக்கிறது

என்ன நடக்கிறது

இந்த நிலையில்தான் அதிபர் பதவியை வரும் ஜனவரி மாதம் இவர் ராஜினாமா செய்ய போகிறார் என்று தகவல்கள் வருகிறது. இவரின் காதலி அலினா கபேவா மற்றும் இரண்டு மகள்களின் வேண்டுகோளின்படி இவர் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். ஜனவரி மாதம் இவர் ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

மறுப்பு

மறுப்பு

அதே சமயம் இந்த செய்தியில் உண்மை இல்லை என்று ரஷ்யாவின் அதிபர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அதிபர் புடினின் உடல்நிலை குறித்து உறுதி செய்யப்படாத தகவல்கள் மட்டுமே வெளியாகி வருகிறது. எந்த விதமான செய்தியும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. புடின் எப்படி இருக்கிறார், ராஜினாமா செய்தி உண்மையா என்று போக போகத்தான் தெரியும்.

 மாற்றம் செய்தார்

மாற்றம் செய்தார்

1999ல் இருந்தே ரஷ்யாவில் அதிபர், பிரதமர் நேற்று இரண்டு டாப் பொறுப்புகளில் புடின் மாற்றி மாற்றி பதவி வகித்து வருகிறார். அதோடு மேலும் இரண்டு முறை அதிபர் தேர்தலில் நிற்க ஆசைப்பட்டு , இந்த வருடம்தான் புடின் அரசியல் சாசனத்தில் மாற்றம் செய்தார். அப்படி பதவிக்காக ஆசைப்படும் ஒரு நபர்.. திடீர் என்று ராஜினாமா செய்வாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

English summary
Russia president Putin feared to have Parkinson: Unconfirmed report came out on his resignation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X